(மா.உஷாநந்தினி)
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் 'கம்பன் விழா - 2026"இன் நான்காம் நாள் காலை நேர நிகழ்வுகள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மே மாதம் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வினை வைத்திய கலாநிதி சிதம்பரகுமார் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்துவைக்க, ஹம்சானந்தி தர்மபாலன் கடவுள் வாழ்த்து பாடினார்.
விவேகா பயிற்சி நிலையத்தின் நிறுவகத் தலைவர் கே.ரி.குருசாமி தலைமையுரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை வங்கி வெள்ளவத்தை கிளையின் பிரதம முகாமையாளர் கே.சிவஞானசுந்தரம் தொடக்கவுரை வழங்கினார்.
அதையடுத்து, மாணவர் அரங்கத்தில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவன் வா.நக்கீரன் 'சபரி" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் பிரியா இராமச்சந்திரன் 'கம்பனில் ஒரு காதல்" என்ற தலைப்பில் எழிலுரை ஆற்றினார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டின் பேராசிரியர் எம். இராமச்சந்திரன் தலைமையில் 'பல்பொருள் சமயம் சொல்லும் பொருள்" என்ற தலைப்பில் சிந்தனை அரங்கு நடைபெற்றது.
சைவம்,வைணவம், பௌத்தம், கிறித்தவம், இஸ்லாம், உலகாயதம் ஆகிய சமயங்களின் உன்னத பொருள் குறித்து முறையே ஆறுதிருமுருகன், எஸ்.ஸ்ரீராம், வண.ராகுல தேரர், பர்வீன் சுல்தானா, அலிஅக்பர், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் உரையாற்றினர்.
படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM