தென் ஆபி­ரிக்க உது­கேலா நகரில் கன்­னித்­தன்­மை­யுடன் இருக்கும் கல்­லூரி மாண­வி­க­ளுக்கு விசேட புல­மைப்­பு­ரில்­களை அந்­ ந­கரின் மேயர் வழங்­கி­யுள்ளார். 

தென் ஆபி­ரிக்­காவின் கிழக்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள குவா­ஸ{லா மாகா­ணத்தின் மேயரே இப்­ பு­லமைப் பரி­சிலை வழங்க முன்­வந்­துள்ளார். 

மாண­விகள் தூய்­மை­யாக இருப்­ப­துடன் கல்­வியில் கவ­னத்தை குவிக்கச் செய்­வதை ஊக்­கு­விப்­ப­தற்­காக இத்­ திட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என மேயர் அலு­வ­ல­கத்தின் பேச்­சா­ள­ரான ஜபு­லானி எம்­கோன்ஸா தெரி­வித்­துள்ளார். 

இப்­ பு­லமைப் பரி­சிலை பெற விரும்பும் மாண­விகள் கல்­வியை பூர்த்திசெய்யும் வரை கன்னித் தன்­மை­யாக இருப்­ப­தற்கு இணங்­கு­வ­துடன், குறிப்­பிட்ட கால இடை­வெ­ளியில் கன்­னித்­தன்மை சோத­னைக்கு உட்ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு இணங்­கவும் வேண்டும். 

முதல் கட்­ட­மாக 16 மாண­வி­க­ளுக்கு இப்­ பு­லமைப் பரிசில் வழங்­கப்­பட்­டுள்­ளது.  

ஒவ்­வொரு வரு­டமும் நூற்­றுக்கு மேற்­பட்ட உயர்­தரப் பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழக மாண­வி­க­ளுக்கு இப்­ பு­லமைப் பரிசில் வழங்­கப்­படும் என எம்­கோன்ஸா தெரி­வித்­துள்ளார்.

நகர மேய­ரான மஸி­புகோ அம்­மையார் இது தொடர்­பாக கூறு­கையில்,  “எம்மைப் பொறுத்­த­வரை, நீங்கள் பட்­ட­தா­ரி­யாகும் வரை அல்­லது சான்­றி­தழை பெறும் வரை எதிர்­வரும் 3 வரு­ட­காலம் நீங்கள் நீங்­க­ளா­கவே இருந்து கல்­வியில் கவ­னம்­ செ­லுத்­து­வ­தற்கு நன்றி கூறுவதாகும்.

இளம்வயது கர்ப்பங்களையும் பாலியல் நோய்களின் பரவலையும் இத் திட்டம் கட்டுப்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.