இன்றைய சூழலில் கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவத்திற்கு பின் தங்களின் வயிற்றுப்பகுதியில் சுருக்கம் விழாதிருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் கருவுற்றிருக்கும் போது அளவானதானவும், சத்தானதாகவும் உள்ள உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். உடல் எடை அதிகரித்து விடும் என்ற காரணத்தால் கொர்போஹைட்ரேட்டுகளை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் இது தவறு என்று எச்சரிக்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

கருவிலிருக்கும் சிசுவிற்கு கொர்போஹைட்ரேட்டுகளின் சத்து அவசியம். அத்துடன் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் மற்றும் மூளை செல்கள் ஆகியவை தங்களின் தங்குதடையற்ற இயக்கத்திற்கு கொர்போஹைட்ரேட்டுகளின் சக்தியை பெரிதும் எதிர்பார்க்கின்றன. அதனால் உடல் எடை அதிகரிப்பு என்ற காரணத்தை முன்வைத்து நீங்களாகவே ஒரு உணவுக்கட்டுப்பாட்டை பின்பிற்றினால், உடலில் மாவுச்சத்து குறைந்து, பேறுக்கால மலச்சிக்கல் மற்றும் மார்னிங் சிக்னெஸ் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். அதனால் பேறு காலத்தின் போது கொர்போஹைட்ரேட் சத்துக்களையும் தவறாமல் எடுத்துக் கொள்ளவேண்டும்.

டொக்டர் கீதா ஹரிப்ரியா.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்