' செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆரோக்கியம்' என எம்முடைய முன்னோர்கள் குறிப்பிடுவார்கள். ஒவ்வொருவரும் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கவே விரும்புவார்கள்.
ஒருவரது ஆரோக்கியம் கெடும் போது தான்.. அவர்களுடைய சிந்தனையில் இறை சக்தி குறித்தும் .. பிரார்த்தனை குறித்தும் ..எண்ணங்கள் உருவாகும்.
இந்நிலையில் உங்களுடைய உடலில் ஏதேனும் நாட்பட்ட பாதிப்பு ஏற்பட்டால் ..அதற்காக தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
அதுவும் அத்தகைய பாதிப்பை கட்டுப்பாட்டில் இருப்பதற்கான நிவாரண சிகிச்சையாக தான் அவை இருக்கும். இந்நிலையில் உங்களுடைய ஆரோக்கிய குறைபாடு நீங்கவும் ஆயுள் நீடிக்கவும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில பிரத்யேக வழிபாட்டினை முன்மொழிந்திருக்கிறார்கள்.
பொதுவாக நீங்கள் பிறந்திருக்கும் கிழமை நாதனை வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும். அதே போல் உங்களுடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எட்டாம் இடத்தின் அதிபதிக்கு உரிய கிழமை நாதனை வழிபட்டாலும் அல்லது உங்களுடைய லக்னாதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ..
அந்த வீட்டில் இருந்து எட்டாம் இடத்தின் அதிபதிக்கு உரிய கிழமை நாதனை வணங்கினாலும் ஆயுள் அதிகரிக்கும்.நீங்கள் ஞாயிற்றுக்கிழமையில் பிறந்திருந்தால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் சூரிய ஓரை தருணத்தில் சிவ வழிபாட்டை மேற்கொண்டால்... ஆரோக்கிய குறைபாடு நீங்கி ஆயுள் அதிகரிக்கும்.
நீங்கள் திங்கள் கிழமையில் பிறந்திருந்தால்.. அன்று காலை 6:00 மணி அளவில் தொடங்கும் சந்திர ஹோரையில் நீங்கள் பிறந்த கிழமைக்கு உரிய நாதனை வணங்கிட வேண்டும்.
செவ்வாய்க்கிழமை என்றால் முருகன் வழிபாட்டையும், புதன்கிழமை என்றால் பெருமாள் வழிபாட்டையும், வியாழக்கிழமை என்றால் தட்சிணாமூர்த்தியையும், வெள்ளிக்கிழமை என்றால் மகாலட்சுமியையும், சனிக்கிழமை என்றால் நவ கிரகத்தில் உள்ள சனி பகவானையும் வழிபட வேண்டும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM