நடிகர் விஜய் அண்டனி நடிக்கும் 'நூறு சாமி' படத்தின் அப்டேட்

Published By: Digital Desk 1

02 May, 2026 | 03:48 PM
image

தமிழ் திரை உலகின் பன்முக ஆளுமை திறன் மிக்க படைப்பாளியான விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'நூறு சாமி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அம்மா அம்மா தான்' எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி வரும் 'நூறு சாமி' திரைப்படத்தில் விஜய் அண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல் , அருள்தாஸ் , முனீஸ்காந்த், பாடினி குமார், ஜென்சன் திவாகர், பக்ஸ் பகவதி பெருமாள், வினோதினி, கோடாங்கி வடிவேலு, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். விவசாயியின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக விவரித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை விஜய் அண்டனி பிலிம் கொர்ப்பரேசன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா அண்டனி தயாரித்திருக்கிறார்.

படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதில் இடம்பெற்ற 'அந்த இந்த சாமிகள் எல்லாம் ஒண்ணா வந்து நின்னாலுமே அம்மா அம்மா தான்.. 'எனத் தொடங்கும் பாடலும்,  பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத பின்னணி பாடகர் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியிருக்கிறார் .அம்மாவை போற்றும் பாடல் என்பதால்.. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படத்தின்...

2026-06-12 17:10:33
news-image

செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் சூரியின் 'மண்டாடி'

2026-06-12 14:30:14
news-image

நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'பகவான்'...

2026-06-12 14:26:13
news-image

ஹபீபி - திரைப்பட விமர்சனம்

2026-06-12 14:21:02
news-image

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 'மூன்றாம் கண்'...

2026-06-11 17:47:30
news-image

நடிகர் கதிர் நடிக்கும் 'லிங்கம்' இணைய...

2026-06-11 17:28:36
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'லட்சுமி காந்தன்...

2026-06-10 15:56:10
news-image

'சம்பவகாரி' யை வெளியிட்ட 'கட்டா குஸ்தி...

2026-06-10 15:50:45
news-image

இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு தேனியில்...

2026-06-10 13:56:51
news-image

பாரதிராஜாவின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய்...

2026-06-10 10:44:33
news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சாதனை வரலாறு

2026-06-10 10:03:22
news-image

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

2026-06-10 08:59:21