டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு பலனளிக்கும் ஒர்டெரியோவென்ஸ் ஃபிஸ்துலா சத்திர சிகிச்சை

Published By: Digital Desk 2

02 May, 2026 | 02:00 PM
image

எம்மில் சிலருக்கு அவர்களுடைய சிறுநீரகங்களின் செயல்பாட்டில் ஏற்படும் விவரிக்க இயலாத தடையின் காரணமாக சிறுநீரக செயல் இழப்பு அல்லது நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடும். இவர்களுக்கு வைத்தியர்கள் முதன்மையான நிவாரண சிகிச்சையாக டயாலிசிஸ் சிகிச்சையை பரிந்துரைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருப்பார்கள்.

இவர்களுக்கு இத்தகைய சிகிச்சை வெற்றிகரமாக பலன் அளிப்பதற்கு ஒர்டெரியோவென்ஸ் ஃபிஸ்துலா எனும் சத்திர சிகிச்சை செய்து கொள்ளவும் வலியுறுத்தி இருப்பார்கள். ஏனெனில் குருதி சுத்திகரிப்பிற்கு  ஒர்டெரியோவென்ஸ் ஃபிஸ்துலா எனும் சிறிய அளவிலான சத்திர சிகிச்சை டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக எம்முடைய உடல்களின் ஆரோக்கியமான ரத்தம் பாய்வதற்கு பாய்வதற்கு தமனி எனும் ரத்த நாளங்களும், அசுத்தமான ரத்தம் செல்வதற்கு சிரை அல்லது நரம்பு எனும் ரத்த நாளங்களும் உள்ளன. இந்த இரண்டு ரத்த நாளங்களும் எம்முடைய உடலில் அளவில் வேறுபட்டாலும் இணையாகவே அமையப் பெற்றிருக்கின்றன. நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் எனும் சிகிச்சை தான் நிவாரணம் எனும் நிலை ஏற்படும் போது.. அவர்களுக்கு வைத்தியர்கள் ஒர்டெரியோவென்ஸ் ஃபிஸ்துலா எனும் சத்திர சிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.

இந்த சிகிச்சையின் போதும் எம்முடைய உடலில் உள்ள தமனி மற்றும் சிரை ஆகிய இரண்டுக்கும் இடையே சத்திர சிகிச்சை மூலம் ஒரு பிரத்யேக இணைப்பு உருவாக்கப்படும். இதன் காரணமாக சிரை எனும் நரம்பு பகுதியில் குருதி ஓட்டம் மேம்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை எளிதாகிறது. இத்தகைய சிகிச்சை பெரும்பாலும் கை அல்லது மணிக்கட்டு பகுதிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய சத்திர சிகிச்சையை மேற்கொண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு ஹீமோடயாலிசிஸ் எனப்படும் நிவாரண சிகிச்சைக்கான முழுமையான பலன்களை நோயாளிகள் பெறுகிறார்கள். ஆனால் இத்தகைய சத்திர சிகிச்சையை மேற்கொண்ட பிறகு வைத்தியர்கள் அறிவுறுத்தும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக நோயாளிகள் பின்பற்ற வேண்டும்.  

இதனிடையே எம்முடைய ஆசனவாய் பகுதியில் ஏற்படும் ஃபிஸ்துலா எனும் பாதிப்பு இத்தகைய ஒர்டெரியோவென்ஸ் ஃபிஸ்துலா எனும் பாதிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதும், இரண்டும் ஒன்றல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் யோகேஷ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டோகோஃபோபியா எனும் திருமணமான பெண்களுக்கு ஏற்படும்...

2026-05-11 16:55:02
news-image

செப்டிக் என்செலோபதி எனும் மூளை பாதிப்பிற்குரிய...

2026-05-07 16:06:06
news-image

இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கான...

2026-05-06 18:44:07
news-image

தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-05-05 17:56:46
news-image

டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு பலனளிக்கும்...

2026-05-02 14:00:06
news-image

மாரடைப்பு ஏற்படுமா ? என்பதை துல்லியமாக...

2026-05-01 15:42:43
news-image

கீமோதெரபி சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படுமா..?

2026-04-30 16:01:21
news-image

இலங்கையில் நால்வரில் ஒருவருக்கு இரைப்பை அழற்சி

2026-04-29 22:31:31
news-image

சர்க்கரை நோயாளிகள் கோடைகால வெப்பத்தை எதிர்கொள்வது...

2026-04-29 18:36:04
news-image

ஒன்றுக்கும் மேற்பட்ட இதய ரத்த நாள...

2026-04-27 16:03:52
news-image

மூளையில் ஏற்படும் காயங்களுக்கான நவீன சிகிச்சை

2026-04-25 13:06:07
news-image

அடிசியோலிசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-04-24 17:37:23