பாட­சாலை மட்ட கிரிக்கெட் வீரர்­களின் திற­மை­களை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கிலும் தேசிய மட்­டத்­திற்கு சிறந்த வீரர்­களை கண்­டு­கொள்ளும் நோக்­கிலும் நடத்­தப்­படும் 15 வய­திற்­குட்­பட்ட பாட­சாலைகள் மட்டக் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிக்கட்டப் போட்டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. 

பிரிமா கிண்ண கிரிக்கெட் போட்­டி­களின் மாகாண மட்டப் போட்­டிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்­ப­மா­க­வுள்­ளன. 

தற்போதுள்ள கிரிக்கெட் சூழலில் பாடசாலை கிரிக்கெட் டை மேம்படுத்துவது முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

இதன்­படி, செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நாட­ளா­விய ரீதி­யி­லி­ருந்து சுமார் 600 இற்கும் அதி­க­மான பாட­சாலை வீரர்­களின் பங்­கு­பற்­ற­லுடன் 39 மாவட்ட மட்ட பாடசாலை அணி­களின் பங்­கு­பற்­ற­லுடன் ஆரம்­ப­மா­கிய போட்டித் தொடரின், மாவட்ட மட்டப் போட்­டிகள் அனைத்தும் தற்­போது நிறை­வுக்கு வந்­துள்­ளன.  

இந்­நி­லையில், அப்­போட்­டி­களில் திற­மை­களை வெளிப்­ப­டுத்­திய வீரர்­களை உள்­ள­டக்­கிய 12 அணிகள் மோதும் மாகாண மட்டப் போட்­டிகள் அடுத்த வாரம் முதல் நடை­பெ­ற­வுள்­ளன.   

இதில் கடந்த முறையைப் போல வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களைப் பிரி­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி அணிகள் கள­மி­றங்­க­வுள்­ள­துடன், வட மாகா­ணத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி யாழ்ப்­பாணம், மன்னார், வவு­னியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து இம்முறை 5 அணிகள் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப்போட்டிக்கு பிரிமா நிறுவனம் 11ஆவது முறையாகவும் பூரண அனுசரணை வழங்கு கின்றமை குறிப்பிடத்தக்கது.