பிரபல சமூகவலைதளமான டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார்.

@ikamalhaasan என்ற முகவரியில் தனது புதிய டிவிட்டர் கணக்கை தொடங்கியுள்ள கமல், தனது முதல் பதிவாக இந்திய சுதந்திர போராட்டத்தை நினைவுக் கூர்ந்துள்ளார்.

மேலும், கமல்ஹாசனின் வருகையை அவரது மகள் ஸ்ருதி ஹாசன் வரவேற்று, கமல் பாடிய தேசிய கீதத்தை மீண்டும் பதிவேற்றியுள்ளார்.

இந்திய குடியரசு தினத்தன்று கமல்ஹாசன் டிவிட்டரில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.