கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா – 2026’ இரண்டாம் நாள் நிகழ்வுகள்

02 May, 2026 | 10:37 AM
image

(மா.உஷாநந்தினி)

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் 'கம்பன் விழா – 2026’இன் இரண்டாம் நாள் மாலை நேர நிகழ்வுகள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மே மாதம் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.

இதன்போது தொழிலதிபர் ஆர்.மகேஸ்வரனும் அவரது துணைவியாரும் இணைந்து மங்கல விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்துவைத்தனர். ரி.கருணாகரனின் கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து, டில்லி கம்பன் கழகத் தலைவர் கே.வி.கே. பெருமாள் தொடக்கவுரை ஆற்றினார்.

கவிஞர் .ஜெயசீலன்கம்பன் காட்டும் ஒளிஎன்ற தலைப்பில் கவிப்பொழிவு நிகழ்த்தினார்.

இந்த ஆண்டு கம்பன் கழகம் நடத்திய கவிதை, பேச்சு, திருக்குறள் மனனப் போட்டி, இஸ்லாமிய இலக்கிய பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, எஸ். ராஜா (தமிழ்நாடு) தலைமையில் 'சான்றோரால் சகிக்க முடியாத பெருங் குற்றம்என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெற்றது.

'சான்றோரால் சகிக்க முடியாத பெருங் குற்றம் கைகேயி செய்ததே’ என தி.திருநந்தகுமார் (அவுஸ்திரேலியா), தாமல் கோ.சரவணனும் (தமிழ்நாடு), 'சான்றோரால் சகிக்க முடியாத பெருங் குற்றம் வாலி செய்ததேஎன 'மரபின் மைந்தன்முத்தையா (தமிழ்நாடு), .குமாரதாசனும் (அவுஸ்திரேலியா)  'சான்றோரால் சகிக்க முடியாத பெருங் குற்றம் இராவணன் செய்ததேஎன பாரதி பாஸ்கர் (தமிழ்நாடு) மற்றும் .விஜயசுந்தரம் ஆகியோரும் வாதிட்டனர்.பதினொரு பேர் அடங்கிய நோக்கர் குழுவினர் முன்னிலையில் நடைபெற்ற பட்டிமண்டப வாதங்களின் நிறைவில், 'சான்றோரால் சகிக்க முடியாத பெருங் குற்றம் கைகேயி செய்ததேஎன்ற அணி நோக்கர் குழுவால் நீக்கப்பட்டது.

அதன் பின், நடுவரான எஸ். ராஜா ஏனைய இரு அணிகளின் வாதங்களை ஆராய்ந்து, 'சான்றோரால் சகிக்க முடியாத பெருங் குற்றம் இராவணன் செய்ததேஎனத் தீர்ப்பளித்ததோடு இரண்டாம் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு...

2026-06-26 18:41:54
news-image

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த...

2026-06-23 16:55:38
news-image

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்...

2026-06-21 16:13:50
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் மஹோற்சவம்...

2026-06-13 16:32:13
news-image

மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின்...

2026-06-11 09:05:37
news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28
news-image

'நாட்டிய வைபவம்' : நாட்டிய கலா...

2026-04-11 12:15:17