இன்றைய சூழலில் முப்பது வயதிற்குள்ளாகவே பெரும்பாலானவர்கள் மாரடைப்பு பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் வைத்தியர்கள், மாரடைப்பு பாதிப்பு தங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறதா? அல்லது ஏற்படுமா? அல்லது அதற்குரிய சில அசௌகரியங்களை நீங்கள் உணர்ந்தால்... உடனடியாக மூன்று முக்கியமான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள்.
சிலருக்கு காலையில் அல்லது எப்போதேனும் மூச்சு சுவாசத்தில் சங்கடம் ஏற்பட்டாலும்... இதய துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படுவதாக உணர்ந்தாலும்... மார்பு பகுதியில் ஏதேனும் அசௌகரியம் ஏற்படுவதாக உணர்ந்தாலும்... அவை மாரடைப்பின் அறிகுறியாக இருக்க கூடும் என அவதானித்து, மூன்று முதன்மையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதில் முதலாவது இ சி ஜி எனப்படும் எலக்ட்ரோ கார்டியோ கிராம் பரிசோதனை... இரண்டாவதாக எக்கோ கார்டியோ கிராம் எனப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை... மூன்றாவதாக பயோ மார்க்கர் என்றும் ட்ரோப்போனின் என்றும் குறிப்பிடப்படும் குருதி பரிசோதனை... ஆகிய மூன்று பரிசோதனைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த பரிசோதனைகளின் அடிப்படையில் உங்களுடைய இதய துடிப்பு- இதய ரத்த நாளங்களின் செயல் திறன் மற்றும் அதன் இயங்குத்திறன்- இதய ரத்த நாளங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு- இதய ரத்த நாளங்களில் பயணிக்கும் குருதியின் நிலைப்பாடு- என இதய ஆரோக்கியம் தொடர்பான அனைத்து விடயங்களையும் அதன் செயல்பாட்டையும் துல்லியமாக அவதானிக்க இயலும்.
இந்த மூன்று பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உங்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டு, கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா? இல்லையா? என்பதையும், அதனை வராமல் தற்காத்துக் கொள்வதற்கான சிகிச்சை முறைகளையும் தெரிந்து கொள்ள இயலும். இதன் மூலம் இதய பாதிப்பினை வராமல் தற்காத்துக் கொள்ளலாம்.
வைத்தியர் ராஜூ தொகுப்பு அனுஷா.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM