சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கான வழிமுறை..!?

01 May, 2026 | 03:39 PM
image

இன்றைய சூழலில் எம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் பணத் தேவை என்பது வித்தியாசமானதாகவே இருக்கிறது. ஒரு நாளும் பண தேவை என்பது முந்தைய நாளை விட குறையாமல் அதிகமாகத்தான் தேவைப்படுகிறது.

நாளாந்தம் வருவாய் ஈட்டும் தொழிலில் உள்ளவர்கள் சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்து கொண்டு அதனை தொடர்ந்து கடைபிடித்தால் தான் உங்களுடைய தன வரவு என்பது ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அதிகரிக்கும். இதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில பிரத்யேக குறிப்புகளை வழங்கியுள்ளனர்.

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு- வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரை தருணங்களில் வெள்ளி நாணயங்களை வாங்கி , அதனை பூஜை அறையில் வைத்து வழிபடுவது- வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானின் காயத்ரி மந்திரத்தை ஐந்து முறை உச்சரித்து, தியானித்து வழிபடுவது... வெள்ளிக்கிழமைகளில் காலை 6:00 மணி அல்லது மாலை சுக்கிர ஹோரையில் மகாலட்சுமிக்கு மல்லிகை பூ அல்லது முல்லை பூவை சாற்றி வழிபட்டாலும் பலன் கிடைக்கும்.

கன்னிப் பெண்களுக்கு அதாவது திருமணமாகாத பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வெள்ளியாலான கொலுசு எனும் அணிகலனை தானமாக வழங்கினாலும் சுக்கிர பகவானின் அருள் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் காமதேனு திரு உருவ புகைப்படத்திற்கு பூஜை செய்வதும்... அருகில் இருக்கும் கோசாலைகளுக்குச் சென்று கோமாதாவை தரிசிப்பதும் , அங்குள்ள பசுவிற்கு தயிர் சாதம் மற்றும் பச்சரிசியும் வெல்லமும் கலந்த கலவை ஆகியவற்றை பசியாற வழங்கினாலும் சுக்கிரனின் அருளை பெறுவதற்கான முயற்சியாகும்.

மொச்சை கொட்டை சுண்டல், கல்கண்டு சாதம், நெல்லிக்காய் சாறு, வீட்டிற்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு குறிப்பாக சுமங்கலி பெண்களுக்கு குங்குமம், தாம்பூலம், இனிப்பு மற்றும் வஸ்திரத்தை தானமாக வழங்கினாலும் சுக்கிர பகவானின் அருள் அதிகரிக்கும்.

தொகுப்பு: சுபயோக தாசன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடனை‌ திருப்பி செலுத்துவதற்கான எளிய குறிப்பு..!?

2026-06-17 16:17:12
news-image

தொடர் தோல்வியை மாற்றியமைப்பதற்கான எளிய வழிமுறை!

2026-06-16 17:04:51
news-image

கண் திருஷ்டியை நீக்குவதற்கான எளிய வழிமுறை..!?

2026-06-15 17:12:49
news-image

புத்திர பாக்கியம் கிடைப்பதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-12 14:13:00
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..!?

2026-06-11 17:16:42
news-image

பரிவர்த்தனை யோகம் எப்போது செயல்படும்..?

2026-06-10 16:42:14
news-image

பண வரவை அதிகரித்துக் கொள்வதற்கான பிரத்யேக...

2026-06-09 18:14:07
news-image

சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதற்கான பிரத்யேக...

2026-06-08 17:05:52
news-image

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!

2026-06-05 16:03:16
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-06-04 16:58:05
news-image

மனதின் அச்சம் நீங்குவதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-03 15:14:02
news-image

வாழ்க்கையில் எப்போதும் அவசியமாகும் எண்கள்..?

2026-06-02 17:58:16