ஜேர்மனியில் இயங்கும் தனியார் விமான சேவை நிறுவனமொன்றில்  பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் பறக்கும் விமானத்தில் பாலியல் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ பதிவு அவ்விமான சேவை அதிகாரிகள் மத்தியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பணிப்பெண் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் காட்சியை  அவ்விமானத்தின் விமானியொருவார் தனது கையடக்கத்தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து தமது சக விமானிகளுக்கு பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் கேள்வியுற்ற  விமான சேவை நிறுவனம் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,  குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

அதுமட்டுமின்றி பறக்கும் விமானத்தில் பாலியல் உறவு வைத்துக்கொள்வது கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும், உரிய ஆதாரத்துடன் முறைப்பாடு அளிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் இதற்கு முன்னரும் இதுபோன்று விமான பணிப்பெண்களின் பாலியல் உறவு காட்சிகளை படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த விமானியும் அல்லது பணிப்பெண்களும் குறித்த விமான சேவை நிறுவன அதிகாரிகளிடம் இதுகுறித்து முறைப்பாடு  தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.