கொழும்பில் அன்னையர் தின விசேட கலந்துரையாடல்: சமூக வலைத்தள சவால்கள் குறித்து ஆராய ஏற்பாடு

01 May, 2026 | 11:24 AM
image

எதிர்வரும் உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு, "சமூக வலைத்தளங்கள் ஊடாக அன்னையர் எதிர்நோக்கும் சவால்களும் தீர்வுகளும்" என்ற தலைப்பிலான விசேட கலந்துரையாடல் நிகழ்ச்சி எதிர்வரும் மே 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு காக்கைதீவில் நடைபெறவுள்ளது.

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு காக்கைதீவு  கடற்கரை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர் ஆரணி சீனிவாசன் ரெஷாங்கன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். கொழும்பு விவாகப் பதிவாளர் திருமதி ரேனகா பாலசுரேஸ் இந்நிகழ்வை நெறிப்படுத்தவுள்ளார்.

இன்றைய டிஜிட்டல் உலகில் அன்னையர் எதிர்கொள்ளும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சமூக வலைத்தளங்களை எவ்வாறு பொறுப்புடன் கையாளுவது மற்றும் டிஜிட்டல் தளங்களில் எழும் சவால்களுக்குச் சாத்தியமான தீர்வுகளைக் கண்டறிதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைக்கும் ஏற்பாட்டாளர்கள், மேலதிக விபரங்களுக்கு +94714777788 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின்...

2026-05-11 09:32:54
news-image

சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா

2026-05-10 16:40:01
news-image

அன்னையர் தினத்தில் படைப்பாக்க முயற்சி ;...

2026-05-10 09:27:29
news-image

திருமலை இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை...

2026-05-10 09:26:58
news-image

வத்துகாமம்  ஶ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு வைகாசி...

2026-05-10 08:56:34
news-image

"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

2026-05-09 20:29:02
news-image

அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

2026-05-09 21:04:33
news-image

பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலையில்.!

2026-05-08 15:25:59
news-image

மண்முனைப் பற்றில் நடைபெற்ற ''கவிதைகளோடு பேசுவோம்''...

2026-05-08 14:37:50
news-image

ஸ்ரீ பேச்சி அம்மன் கும்பாபிஷேகம்: கொழும்பில்...

2026-05-07 17:32:56
news-image

வெள்ளவத்தையில் "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026"...

2026-05-06 17:10:28
news-image

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை...

2026-05-05 10:03:02