(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட கருத்து ஒன்றின் மூலம் இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக குற்றச்சாட்டப்பட்டு , பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வியாழக்கிழமை (30) குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
நீதிமன்றத்தினால் இதற்கு முன்னர் விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய, பிரதிவாதியான ஞானசார தேரர் வியாழக்கிழமை (30) நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இதனைத் தொடர்ந்து, பிரதிவாதியின் விரல் ரேகை அடையாளங்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சீ. ராகல, சந்தேகநபரான ஞானசார தேரரை 5 இலட்சம் ரூபா தனிப்பட்ட பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வில்பத்து பகுதியில் இடம்பெற்ற மீள்குடியேற்றம் குறித்து வெளியிட்ட கருத்தின் மூலம் இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாகத் தெரிவித்து, தண்டனைச் சட்டக்கோவையின் 219 (பி) பிரிவின் கீழ் சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வழக்குடன் தொடர்புடைய அசல் வழக்கு கோப்புகளை அடுத்த தவணையில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட தரப்பினரை அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM