"கம்பன் விழா - 2026" கொழும்பில் ஆரம்பம்

01 May, 2026 | 01:24 AM
image

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2026 நிகழ்வு ஏப்ரல் 30ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஆரம்பமானது. 

விழாவின் முதல் அங்கமாக, கம்பன் திருவுருவப்படமும் இராமர் திருவுருவச் சிலையும், மண்டபத்துக்கு அருகாமையில் உள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி திருக்கோவிலிலிருந்து ஊர்வலமாக மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மண்டப மேடையில் நிறுத்தப்பட்டு தீபாராதனை வழிபாடு நடைபெற்றது.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவி அபிராமி கைலாசபிள்ளை மங்கல விளக்கேற்றி நிகழ்வைத் தொடக்கிவைக்க, 'இசைவேந்தன்" மு.தயாபரன் கடவுள் வாழ்த்துப் பாடினார்.

கொழும்பு கம்பன் கழகத்தின் பெருந்தலைவரும் முன்னாள் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியுமான  ஜெ. விஸ்வநாதன் தலைமையுரை ஆற்றினார்.

கொழும்பு கம்பன் கழகத் தலைவர்  ஈ.கணேஷ் தெய்வநாயகம் தொடக்கவுரையும், மலேசிய முன்னாள் அமைச்சர் 'டத்தோஸ்ரீ' எம்.சரவணன் எழிலுரைக்கான ஒரு தொடக்க உரையையும் வழங்கினர்.

அதன் பின்னர் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் “தாரணிக் கொடையாளன் கம்பன்” என்ற தலைப்பில் எழிலுரை ஆற்றினார். 

இந்த நிகழ்வில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் எழுதிய “இராம காதை” வசன நடை, முதலாம் பகுதி நூல் வெளியீடு நடைபெற்றது.

நூலின் முதல் பிரதியை தமிழ்நாட்டின் கோவிலூர் மடாலய நாராயண ஞானதேசிக சுவாமிகளிடமிருந்து இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார். 

அடுத்து, ஐந்து ஆளுமைகளுக்கு அறக்கட்டளை விருதுகள் வழங்கப்பட்டன. பேராதனை பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் வ. மகேஸ்வரன், மிருதங்க வித்துவான் வை. வேனிலான், யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.  பிரதீபராஜா, மூத்த கவிஞர் நாக. சிவசிதம்பரம், ஊடகவியலாளர் நிசாம்தீன் ஹஷாம் முஹம்மத் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

அதனையடுத்து நாட்டிய அரங்கில் ஆறு கம்பராமாயண காண்டங்களை எடுத்துக்காட்டும் வகையிலான நடனங்கள் நிகழ்த்தப்பட்டதோடு நடன ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

- மா. உஷாநந்தினி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44