ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் வாகன சாரதிகளை உடனடியாக சேவைக்கு வருமாறு மின்சாரபை அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 2014 செப்டெம் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் வாகன சாரதிகளையே இவ்வாறு சேவைக்கு திரும்புமாறு மின்சாரசபை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமது கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் உரிய தீர்வை முன்­வைக்­காததால் மின்சாரசபை ஊழியர்கள் பரந்­து­பட்ட தொழிற்­சங்கப் போராட்­டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, கடமைக்கு வருகைதராத ஊழியர்கள் அனைவரும் தமதுகடமையில் இருந்து விலக்கிச்சென்றதாக கருதப்படுவர்என மின்சாரபை அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்­கா­லிக மற்றும் உடன்­ப­டிக்கை அடிப்­ப­டையில் மின்­சார சபையில் பணி­யாற்றும் சகல அத்­தி­யாவ­சிய, அவ­சர மின்­சார சேவை வழங்கும் ஊழி­யர்­களும் இன்று காலை 8.30 மணிக்கு முன்னர் கட­மைக்குத் திரும்ப வேண்டும்.  அல்­லாத­வி­டத்து குறித்த ஊழி­யர்கள் தமது பணி­யி­லி­ருந்து விலகிச் சென்­ற­தாகக் கருதி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என மின்­சக்தி மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி வள அமைச்சு அறி­வித்­திருந்த நிலையிலேயே மின்சாரசபையால் மேற்கண்டவாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.