கீமோதெரபி சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படுமா..?

Published By: Digital Desk 2

30 Apr, 2026 | 04:01 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் வாழ்க்கை நடைமுறையையும் உணவு முறையையும் சுவையின் அடிப்படையில் மாற்றி அமைத்துக் கொண்டதால் விவரிக்க இயலாத பல வகையினதான உடலியல் கோளாறுகள் ஏற்படுகின்றன என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பல வகையினதான புற்று நோய்கள் அதிகரித்து வருகிறது என்றும் ,இதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மூலம் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்தும் அவர்கள் வைத்தியர்களிடம் தொடர்ந்து சந்தேகங்களை கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் இதற்கு வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.

புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அவை முழுமையான நிவாரணம் பெறுவதற்காக வைத்தியர்கள் சத்திர சிகிச்சை மற்றும் கீமோதெரபி எனப்படும் சிகிச்சையை ஒருங்கிணைந்து வழங்குகிறார்கள். இந்நிலையில் கிமோதெரபி எனும் சிகிச்சையை மேற்கொள்வதால் ஏதேனும் பக்க விளைவு ஏற்படுமா? என்ற அச்சம் நோயாளிகளிடத்தில் ஏற்படுகிறது.

பொதுவாக கீமோதெரபி எனும் சிகிச்சை எம்முடைய நரம்புகள் வழியாகவும், வாய் வழியாகவும் வழங்கப்படுகிறது. நரம்புகள் வழியாக வழங்கப்படும் கீமோதெரபி சிகிச்சை என்பது வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மிக அரிதாக மூன்று முறை வழங்குவார்கள். அதன் பிறகு நோயாளிகள் வீட்டிற்கு சென்றவுடன் அவர்களுக்கு இந்த சிகிச்சை தொடர்பான பக்க விளைவுகள் சில ஏற்படக்கூடும்.

இந்த சிகிச்சையை மேற்கொள்ள தொடங்கி ஏழு அல்லது பத்து நாட்களுக்குள் சிலருக்கு வாந்தி, குமட்டல், தலைவலி, வயிற்று வலி, வயிற்று அசௌகரியம், பேதி , சோர்வு ஆகியவை ஏற்படக்கூடும். ஆனால் இந்த பக்க விளைவுகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். ஏனெனில் இவை எம்முடைய உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிப்பதுடன் ஆரோக்கியமான செல்களையும் பாதிக்கிறது அதன் விளைவாகத்தான் மேலே சொல்லப்பட்ட பக்க விளைவுகள் உண்டாகிறது. 

இந்த தருணங்களில் நோயாளிகள் வைத்தியர்களின் அறிவுரையை முழுமையாக பின்பற்ற வேண்டும். உணவு முறை, உடற்பயிற்சி, ஓய்வு , தனிமைப்படுத்திக் கொள்ளுதல் ஆகிய விடயங்களில் தீவிர கவனம் செலுத்தி செலுத்தினால் பக்கவிளைவுகள் விரைவாக நீங்கிவிடும்.‌உங்களுடைய உணவு பட்டியலில் காரமான உணவையும், எண்ணெய் பதார்த்தங்களையும் முற்றாக தவிர்த்திட வேண்டும். அதிலும் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால்.. உணவு முறையில் தீவிர கவனம் செலுத்திட வேண்டும். இந்த சிகிச்சை முடிந்த பிறகும் உங்களுடைய உணவு பட்டியலில் காரமான உணவையும் எண்ணெய் பதார்த்தங்களையும் தவிர்க்கலாம்.

வைத்தியர் மணிமேகலை
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுநீரக நீர்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2026-05-12 15:01:18
news-image

டோகோஃபோபியா எனும் திருமணமான பெண்களுக்கு ஏற்படும்...

2026-05-11 16:55:02
news-image

செப்டிக் என்செலோபதி எனும் மூளை பாதிப்பிற்குரிய...

2026-05-07 16:06:06
news-image

இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கான...

2026-05-06 18:44:07
news-image

தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-05-05 17:56:46
news-image

டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு பலனளிக்கும்...

2026-05-02 14:00:06
news-image

மாரடைப்பு ஏற்படுமா ? என்பதை துல்லியமாக...

2026-05-01 15:42:43
news-image

கீமோதெரபி சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படுமா..?

2026-04-30 16:01:21
news-image

இலங்கையில் நால்வரில் ஒருவருக்கு இரைப்பை அழற்சி

2026-04-29 22:31:31
news-image

சர்க்கரை நோயாளிகள் கோடைகால வெப்பத்தை எதிர்கொள்வது...

2026-04-29 18:36:04
news-image

ஒன்றுக்கும் மேற்பட்ட இதய ரத்த நாள...

2026-04-27 16:03:52
news-image

மூளையில் ஏற்படும் காயங்களுக்கான நவீன சிகிச்சை

2026-04-25 13:06:07