இலங்கையின் நிதித்துறையின் அத்திவாரம் என்ற தனது ஸ்தானத்தை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ள மக்கள் வங்கி, Best Management Practices Company Awards 2026 விருதுகள் நிகழ்வில் மிகச் சிறந்த பெறுபேறுகளை நிலைநாட்டியுள்ளது.
Institute of Chartered Professional Managers of Sri Lanka அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட, மிகவும் மதிப்பார்ந்த இவ்விருதுகள் நிகழ்வில் முகாமைத்துவம், புத்தாக்கம், மற்றும் நிறுவன பொறுப்புணர்வு ஆகியவற்றில் மகத்துவம் மிக்க நிறுவனமாக மக்கள் வங்கி அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது.
இவ்வாண்டு விருதுகள் நிகழ்வில் வங்கிச்சேவை (அரச துறை) பிரிவில் வெற்றிப்பட்டத்தை மக்கள் வங்கி தனதாக்கியுள்ளதுடன், இலங்கையிலுள்ள மிகச் சிறந்த 40 நிறுவனங்கள் மத்தியிலும் தரப்படுத்தப்பட்டுள்ளது.
பரந்தளவில் நிறுவனரீதியான மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், டிஜிட்டல் அறிவு, பெண் தலைமைத்துவம் மற்றும் பெண்களை இலக்காகக் கொண்ட முயற்சிகள், மற்றும் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு ஆகிய துறைகளிலும் மூன்று சிறப்புத்தகுதி விருதுகளை வங்கி வென்றுள்ளது.
பிரதிப் பொது முகாமையாளர்/பதில் நிதித் தலைமை அதிகாரி மற்றும் மூலோபாயத் திட்டமிடல், செயற்திறன் முகாமைத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கான தலைமை அதிகாரி (பதில்) நில்மினி பிரேமலால், பிரதிப் பொது முகாமையாளர் (நிறுவன வங்கிச்சேவை) சாதனா பெரேரா, பிரதம டிஜிட்டல் அதிகாரி மங்கள காரியவசம் மற்றும் அணியின் ஏனைய உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மக்கள் வங்கியின் சார்பில் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இலங்கையில் அனுமதி பெற்ற முன்னணி வர்த்தக வங்கிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்ற மக்கள் வங்கி, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தனது அணுகுமுறை, முற்போக்கான டிஜிட்டல் ரீதியான வளர்ச்சியை நோக்கிய மாற்றத்திற்கான நிகழ்ச்சிநிரல் ஆகியவற்றினூடாக வங்கித்துறையில் தர ஒப்பீட்டுக்கான நியமங்களை தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.
ரூபா 3.7 ட்ரில்லியன் தொகைக்கும் மேற்பட்ட சொத்துத் தளம் மற்றும் 15.3 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் தளம் ஆகியவற்றைக் கொண்டுள்ள இவ்வங்கி, இருபத்து நான்கு மணி நேரமும் அத்தியாவசிய வங்கிச்சேவைகளை வழங்குவதற்காக 745 கிளைகள் மற்றும் சேவை யைமங்கள், மற்றும் 300 க்கும் மேற்பட்ட சுய வங்கிச்சேவை மையங்களை உள்ளடக்கியவாறு, நாடளாவியரீதியில் மிகப் பாரிய வங்கிச்சேவை வலையமைப்புடன் இயங்கி வருகின்றது.
மூலோபாய தலைமைத்துவம், கொள்கை அமுலாக்கம், வள உச்சப்பயன்பாடு, மற்றும் நிறுவன நிர்வாகம் ஆகிய அம்சங்களில் நிறுவனங்களை மதிப்பீடு செய்கின்ற முன்னணி மேடையாக Best Management Practices Company Awards விருதுகள் நிகழ்வு திகழ்ந்து வருகின்றது. இறுக்கமான மற்றும் விரிவான மதிப்பீட்டுக் கட்டமைப்பானது புத்தாக்கம், மீள்திறன், மற்றும் முகாமைத்துவ ஆற்றல் ஆகியவற்றில் மகத்துவத்தை வெளிப்படுத்தும் நிறுவனங்கள் மாத்திரம் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது உறுதி செய்யப்படுகின்றது.
மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ அவர்கள் இந்த முக்கிய சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில்:
“எமது நிர்வாகக் கட்டமைப்பு, தொழில் நேர்த்தி மிக்க செயற்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் அதியுயர் தராதரங்களைக் கட்டிக்காப்பதில் எமது அணியின் கூட்டு அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்குச் சான்றாக இந்த அங்கீகாரம் காணப்படுகின்றது. தேசத்திற்கு அர்த்தம்மிக்க மதிப்பைத் தோற்றுவிக்கும் அதேசமயம், நீடித்த வளர்ச்சியை முன்னெடுப்பதில் மக்கள் வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.”
மக்கள் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி/ பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: “வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்தாக்கம், டிஜிட்டல் அதிகாரமளிப்பு, மற்றும் அனைவரையும் அரவணைக்கும் வங்கிச்சேவை ஆகியவற்றில் எமது இடைவிடாத கவனத்தை இந்த அங்கீகாரங்கள் பிரதிபலிக்கின்றன.
வலிமைமிக்க நிதித் துறையில் நாம் தொடர்ந்தும் வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில், இலங்கை மக்கள் அனைவரின் வாழ்வுகளையும் மேம்படுத்தவல்ல அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய, தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படுகின்ற தீர்வுகளை வழங்குவதற்கு நாம் தொடர்ந்தும் முன்னுரிமை அளித்துள்ளோம்.”
நீண்ட கால அடிப்படையில் தேசத்தின் அபிவிருத்திக்குப் பங்களிப்பாற்ற உதவுவதற்கு, அனைவரையும் அரவணைக்கின்ற, நீடித்து நிலைக்கக்கூடிய, மற்றும் தொழில்நுட்பத்திற்கு இடமளிக்கின்ற நிதித் தீர்வுகளில் முன்னோடியாகச் செயற்பட்டு, நாடெங்கிலும் தனிநபர்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் முன்னிலை வகிக்கின்ற நிதியியல் கூட்டாளராகத் திகழ வேண்டும் என்ற தனது இலக்கினை நோக்கி மக்கள் தொடர்ந்தும் உறுதியுடன் பயணித்து வருகின்றது.
நிறுவனரீதியாக ஆற்றல்களை வலுப்படுத்தி, முற்போக்கான பணித்தளக் கலாச்சாரத்தை வளர்த்து, வாடிக்கையாளர்கள், தொடர்புபட்ட தரப்பினர், மற்றும் பரந்த பொருளாதாரத்திற்கு நீடித்த மதிப்பை வழங்குவதில் வங்கியின் மூலோபாயரீதியான கவனத்தை இந்த அங்கீகாரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி: வங்கிச் சேவையின் (அரச துறை) வெற்றியாளராகவும், மிகச் சிறந்த நாற்பது நிறுவனங்கள் மத்தியல் அங்கீகாரத்திற்கான விருதை மக்கள் வங்கி பெற்றுக்கொள்ளும் காட்சி.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM