இலங்கையில் நால்வரில் ஒருவருக்கு இரைப்பை அழற்சி

Published By: Vishnu

29 Apr, 2026 | 10:31 PM
image

(செ.சுபதர்ஷனி)

நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையில் சுமார் 25 சதவீதமானோர் இரைப்பை அழற்சி நோயால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதாவது நான்கில் ஒருவருக்கு இந்நோய் நிலைமை உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் நோய் தொடர்பான நிபுணத்துவ வைத்தியர் தனுஷி அபேநாயக்க தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாம் உட்கொள்ளும் உணவானது இரைப்பையிலேயே தற்காலிகமாகத் தங்கியிருந்து சமிபாடடைய ஆரம்பிக்கின்றது. இரைப்பையின் உட்புற மென்சவ்வுகளில் ஏற்படும் ஒருவகையான அழற்சியே காஸ்ட்ரைடிஸ் அல்லது இரைப்பை அழற்சி எனப்படுகிறது. அண்மைக் காலமாக வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தரும் இரைப்பை அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இலங்கையில் அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்றின் போது நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையில் சுமார் 25 சதவீதமானோர் இரைப்பை அழற்சி நோயால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதைாக தெரியவந்துள்ளது. அதாவது நான்கில் ஒருவருக்கு இந்நோய் நிலைமை உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஹெலிகோபாக்டர் பைலோரி  எனும் பாக்டீரியா தொற்றே இதற்கு முக்கிய காரணமாகும். அத்துடன் நீண்டகாலமாக வலி நிவாரணிகளைப் பயன்படுத்துதல், தவறான உணவுப் பழக்கம், மாறிவரும் வாழ்க்கை நடைமுறை, மன அழுத்தம் மற்றும் மதுபானம், புகைப்பிடித்தல் காரணமாகவும் இந்நோய் ஏற்படலாம்.

புற்றுநோயின் ஆரம்ப நிலையிலும்  இரைப்பை அழர்ச்சியை ஒத்த  அறிகுறிகளே தென்படுகின்றன. ஆகையால் இரைப்பை அழற்சிக்கான அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம். 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உடல் எடை குறைதல், வாந்தியுடன் இரத்தம் வெளியேறுதல் அல்லது மலம் கருப்பு நிறத்தில் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். எனவே, உடனடியாக எண்டோஸ்கோபி பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கன்ஸ்டிரிக்டிவ் பெரிகார்டிடிஸ் எனும் இதய பாதிப்பிற்கான...

2026-06-12 14:16:00
news-image

அஸ்பெர்கில்லோமா எனும் நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன...

2026-06-11 17:22:11
news-image

உடற்பருமனால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினரின் எண்ணிக்கை...

2026-06-10 16:00:56
news-image

க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம் எனும் முழங்கை...

2026-06-09 18:18:06
news-image

இதய செயலிழப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் இம்பெல்லா...

2026-06-09 07:16:20
news-image

புரோஸ்டேட் சுரப்பி வீக்க பாதிப்பிற்கான நவீன...

2026-06-08 17:01:59
news-image

அயோட்டிக் டிஸ்சக்சன் எனும் இதய ரத்த...

2026-06-05 16:14:23
news-image

தழும்புகளற்ற தைரொய்க்டொமி எனும் நவீன சத்திர...

2026-06-04 17:33:23
news-image

மெட்டபொலிக் என்செபலோபதி ஹைபோநெட்ரீமியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-06-03 15:08:28
news-image

தனிமை அதிகமானால் குருதி அழுத்த பாதிப்பும்...

2026-06-02 17:55:09
news-image

நார்த்திசு கட்டிகளை அகற்றுவதற்கான நவீன சிகிச்சை

2026-06-01 14:38:53
news-image

தேசிய வைத்தியசாலையில் ரூ.99 மில்லியன் செலவில்...

2026-06-01 04:59:15