கோடை காலத்தில் வெப்பநிலை இயல்பான அளவைவிட அதிகமாகவே இருக்கும். சில நிலவியல் பகுதிகளில் கோடை கால வெப்பம் .. வெப்ப அலையாகவும் மாறி மனிதர்களை தாக்கக்கூடும். இதிலிருந்து தப்பிக்க ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையினதான வழிமுறைகளை பின்பற்றுவார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகள்- குருதியில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக சிகிச்சைகளை மேற்கொண்டு வருபவர்கள்- இந்த கோடை காலத்தில் இயல்பான அளவைவிட கூடுதலான கூடுதலாக தாகம் எடுக்கும். இதனை எதிர்கொள்வது குறித்து வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
ஆரோக்கியமாக உள்ளவர்கள் கூட கோடைகால வெப்பத்தை எதிர்கொள்வதற்கு பழச்சாறு, நீர்மோர், இளநீர், கூழ் ஆகியவற்றை ஆகியவற்றையும், நீரையும் அதிக அளவில் பாவிப்பர். ஆனால் இவை அனைத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கும் பொருந்துமா ? என்றால்... பொருந்தாது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். குறிப்பாக மற்றவர்களை விட இந்தக் கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு நீர் சத்து குறைபாட்டின் அளவு அதிகரிக்கும். தாகம் எடுத்து எவ்வளவு தண்ணீரை பருகினாலும்.. தாகம் தணிவதில்லை. இவர்கள் அதிக அளவு தண்ணீர் அருந்துவதால் .. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். அதிலும் அந்தத் தருணத்தில் எரிச்சலும் ஏற்படக்கூடும். இதனை தவிர்க்க வேண்டும் என்றால்... சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே நீர் சத்து குறைபாட்டிற்காக நீர்மோர் மற்றும் இளநீர் ஆகியவற்றை பருகலாம். அதிலும் இளநீர் இயற்கையான முறையில் கிடைப்பதால்.. சர்க்கரை நோயாளிகள் கோடை காலத்தில் இதனை பருகுவதால் இரத்த சர்க்கரையின் அளவு உயராது கட்டுப்பாட்டில் இருக்கும். நீர் சத்து குறைபாட்டிற்கு போதுமான தாதுக்களும் இளநீரில் இடம் பிடித்திருப்பதால் அதனை பருகலாம்.
நீர்ச்சத்து குறைபாட்டிற்காக சர்க்கரை நோயாளிகள் பழச் சாறு அருந்துவதை விட.. பழமாகவே சாப்பிடுவது தான் ரத்த சர்க்கரையின் அளவு உயராமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அதே தருணத்தில் சர்க்கரை நோயாளிகள் கோடை காலத்தில் நீர்ச்சத்து குறைபாட்டிற்காகவும் தாகத்தை தணிப்பதற்காகவும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் கம்பங்கூழ், ராகிக் கூழ் போன்றவற்றை பாவிப்பதை தவிர்க்கலாம். ஏனெனில் இவற்றில் மாவுச்சத்து இருப்பதால் இவை சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரையின் அளவில் மாற்றம் ஏற்படும்.
வைத்தியர் சிவ பிரகாஷ் தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM