அம்பாந்தோட்டை, பஹல அந்தரவெவ பிரதேசத்தின் திமுத்துகமையில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவர் இருபத்தேழு வயதுப் பெண் என்றும் இரண்டு பிள்ளைகளின் தாய் என்றும் அவரது கள்ளக் காதலர் எனக் கருதப்படும் நபரே அவரைக் கொலை செய்ததாக தாம் சந்தேகிப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இப்பெண்ணின் கணவர் அண்மையில் இவரைக் கைவிட்டுச் சென்றதாகவும், அதன் பின் தன் பிள்ளைகளுடன் இப்பெண் தனியாகவே வாழ்ந்து வந்ததாகவும் தெரியவருகிறது.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபர் கைது செய்யப்படும் பட்சத்தில் கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.