நுண் துளை சத்திர சிகிச்சைக்கு பயன்படும் வகையினதான புதிய அதிநவீன நுண்ணோக்கியை சென்னையில் உள்ள பிரஷாந்த் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ நிபுணரான டொக்டர் கீதா ஹரிப்ரியா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘40 எக்ஸ் நுண்ணோக்கி என்ற அழைக்கப்படும் இந்த நுண்ணோக்கி, எம்முடைய உடல் பாகங்களை சாதாரண கண்களால் காண்பதை விட 40 மடங்கு பெரிதாக்கி காண்பிக்ககூடியதாகும். இதன் உதவியால் இரத்தநாளங்கள் இணைப்பு, நரம்புகளை சீராக்குதல் உள்ளிட்ட நுட்பமான சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியும். சருமத்தில் கீழே உள்ள நிணநீர் நாளங்களைக் காண்பதற்கும், ஒரு மில்லிமீற்றருக்கும் குறைவான அளவுக் கொண்ட ரத்தநாளங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சீராக்கவும் இயலும்.

மேலும் இந்த நுண்ணோக்கியில் பொருத்தப்பட்டிருக்கும் சக்தி வாய்ந்த லென்ஸால் பிளாஸ்ரிக் சத்திர கிச்சை, மார்பகம், சிறுநீர் பாதை, மூளை உள்ளிட்ட எல்லா உறுப்புகளிலும் எளிதாக சத்திர சிகிச்சையை செய்ய இயலும். இதன் மூலம் சத்திர சிகிச்சைக்கான வெற்றி வீதம் அதிகரித்து நோயாளிகள் விரைவில் குணமடையலாம்.’ என்றார்.

தகவல் : சென்னை அலுவலகம்