கலை, கலாசாரம் மற்றும் சமூக சேவைகளில் கடந்த 46 ஆண்டுகளாக தொடர்ச்சியாகப் பணியாற்றி வரும் “புதிய அலை கலை வட்டம்” அமைப்பு அதன் ஓர் அங்கமான “நல உதயம்” அமைப்பை மீளுருவாக்கம் செய்துள்ளது. இது அர்த்தமுள்ள மற்றும் சமூகப் பயனுடைய நிகழ்வொன்றை ஞாயிற்றுக்கிழமை (26) வத்தளை நகர மண்டபத்தில் நடத்தியது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, கிராமிய மரபுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கத்துடன் நடைபெற்றது.
பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கிராமிய விளையாட்டுப் போட்டிகளில் விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு மட்டும் நடத்தப்பட்டது.
இப்போட்டிகள் மக்களிடையே ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் ஆரோக்கியமான போட்டித் தன்மையை வளர்க்கும் வகையில் அமைந்திருந்தன.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் மற்றும் ஊக்குவிப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதேவேளை, சமூக சேவையில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருபவர்களை கௌரவிக்கும் விருது வழங்கும் நிகழ்வொன்றையும் நடத்தியது.
இவ்விழாவின் பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேஷன் நிறுவனர் புரவலர் ஹாஷிம் உமர் மற்றும் மர்யம் ஹாஷிம் உமர் ஆகியோரும் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், நகர சபை உறுப்பினர் விஜயகுமார், பிரபல பேச்சாளரும் இலக்கியவாதியுமான பி. எஸ். செல்வரட்ணம், தொழிலதிபரும் வாழ்வியல் மேம்பாட்டு பேச்சாளருமான டாக்டர் விஜயசிறி சந்திரமோகன் மற்றும் புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதா மேத்தா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.
இதேவேளை அங்கவீனமுற்ற குடும்பஸ்தர் ஒருவருக்கு இரு கால்களையும் பொருத்துவதற்கான நிதி உதவிகளும் பலரினால் முன்வந்து வழங்கப்பட்டன.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM