"சிறைச்­சா­லை­களில் கமரா பொருத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள்"

Published By: Robert

15 Sep, 2017 | 09:43 AM
image

சிறைச்­சா­லை­களில் கமரா வச­திகள் இல்லை. இதனால் இரண்டு மாதத்­திற்குள் அனைத்து சிறைச்­சா­லை­க­ளுக்கும் கமரா பொருத்­த­வுள்ளோம். முதலில் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கும் அதன் வைத்­தி­யசாலைக்கும் கமரா பொருத்த தீர்­மா­னித்­துள்­ள­தாக சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு மற்றும் இந்து மத விவ­கார அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் தெரி­வித்தார்.

அத்­துடன் கைதி­யொ­ருவர் ஒரு வைத்­தி­ய­சாலையில்யில் அனு­ம­திக்க வேண்­டு­மாயின் நான்கு வைத்­தி­யரின் சான்­றிதழ் பெற வேண்டும் என்­ப­தனை கட்­டாயம் செய்­ய­வுள்ளோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு மற்றும் இந்து மத விவ­கார அமைச்சில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

சிறைச்­சா­லை­களில் கமரா வச­திகள் இல்லை. இதன்­படி தற்­போது நாம் இரண்டு மாதத்­திற்குள் அனைத்து சிறைச்­சா­லையில்­க­ளுக்கும் கமரா பொருத்­த­வுள்ளோம். முதலில் வெலி­கடை சிறைச்­சா­லைக்கும் அதன் வைத்­தி­யசாலைக்கும் கமரா பொருத்த தீர்­மா­னித்­துள்ளோம். இவ்­வாறு கம­ராக்கள் பொருத்­து­வதன் ஊடாக பல பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்கும். 

மேலும் தற்­போது சிறைக்கு செல்லும் அனை­வரும் வைத்­தி­ய­சா­லைக்கு செல்­வது வழக்­க­மாகி விட்­டது. இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் முக­மாக கைதி­யொ­ருவரை வைத்­தி­ய­சாலையில் அனு­ம­திக்க வேண்­டு­மாயின் நான்கு வைத்­தி­யரின் சான்­றிதழ் பெற வேண்டும் என்­ப­தனை கட்­டாயம் செய்­ய­வுள்ளோம்.

தற்­போது உலகில் உள்ள சிறைச்­சா­லை­களின் தரத்தின் அடிப்­ப­டையில் பார்க்கும் போது இலங்கை சிறைச்­சாலை தர­மிக்­க­தாக உள்ளது. தற்போதைக்கு பாரியளவில் பிரச்சினைகள் கிடையாது. 

அத்துடன் வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணைக்கு மாற்றுவதற்கான பணிகளை நாம் ஆரம்பித்துள்ளோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் -...

2025-02-13 08:49:04
news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25