யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்னால் தமக்கு பௌத்த விகாரை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையடங்கிய துண்டுப்பிரசுரம்  பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மரங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக பௌத்த மாணவர் ஒன்றியம் இலங்கை என பெயர் குறிப்பிடப்பட்டே இந்த துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் கலைப்பீடப் பகுதியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மேற்படி துண்டு பிரசுரங்கள் இன்று காலை அவதானிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்ற வருடங்களுக்கு மேலாக சிங்கள் மாணவர்கள் கல்வி கற்கின்றபோதிலும் இது வரையில் இத்தகைய கோரிக்கை எதுவும் பல் கலைக்கழக நிர்வாகத்திறக்கு எந்தவொரு மாணவர் அமைப்பும் முன் வைக்கவில்லையென பல் கலைக்கழக உயர் மட்ட அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.