2026 LG INNOFEST : ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான புதுமையான வளர்ச்சி உத்திகளை LG ELECTRONICS அறிமுகம் செய்துள்ளது 

27 Apr, 2026 | 05:58 PM
image

2026 LG INNOFEST நிகழ்வில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான புதுமையான வளர்ச்சி உத்திகளை LG ELECTRONICS அறிமுகம் செய்துள்ளது. ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் AI தொழில்நுட்பத்தில் இயங்கும் சமையலறை மற்றும் சலவை அறை தீர்வுகளை LG ELECTRONICS வழங்கியுள்ளது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் 2026 LG InnoFest கண்காட்சி, ஏப்ரல் 7 முதல் 10 வரை தென் கொரியாவின் Busan நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், வணிக கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் சுமார் 20 நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட துணையாளர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

“Innovation, Forward Together” என்ற தலைப்பின் கீழ், ஆசிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய நவீன LG தயாரிப்புகள் பல அறிமுகப்படுத்தப்பட்டன. பல்வேறு தன்மைகள் கொண்ட ஆசிய சந்தையின் தேவைகளை நுணுக்கமாக புரிந்துகொண்டு, புதுமையான தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட, உள்ளூர் முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்புகள் இங்கு வெளியிடப்பட்டன.

புதிய மாதிரியின் சலவை தீர்வுகள்

LG சலவை தயாரிப்புகளை மேலும் விரிவுபடுத்தி, புதிய WashTower மாடல்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஆசிய வீடுகளுக்கு ஏற்றவாறு 25 அங்குலம், 24 அங்குலம் மற்றும் 27 அங்குலம் போன்ற மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இடத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், தினசரி வாழ்க்கையை எளிதாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புதிய Top-loading மாடல்கள் Artificial Intelligence Direct Drive (AI DD) தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது துணிகளின் தன்மைக்கு ஏற்ப துவைக்கும் இயக்கத்தை வழங்கி, பாதுகாப்பான மற்றும் திறமையான சலவையை உறுதி செய்கிறது. TurboWash 3D தொழில்நுட்பம் மூலம் 30 நிமிடங்களுக்குள் முழுமையான சலவையை பெறலாம். மேலும், தானியங்கி டிஸ்பென்சர் ஒவ்வொரு சலவைக்கும் தேவையான சலவைத் தூள் அளவை தானாக வழங்குவதால், அடிக்கடி நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை.

புதிய LG WashCombo மூலம் துணிகளை உலர்த்துவது மேலும் எளிதாக்குகிறது. Inverter HeatPump தொழில்நுட்பம் இதை அதிக செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையுடன் செய்கிறது. ஆசிய வாடிக்கையாளர்கள் அதிக கவனம் செலுத்தும் மின்சாரச் செலவைக் கருத்தில் கொண்டு, மின்சார சேமிப்பை உறுதி செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

வணிக அளவிலான சலவைகளுக்கு, நீண்ட நேரம் இயங்கக்கூடிய மற்றும் பெரிய அளவு ஆடைகளை திறம்பட சலவை செய்யக்கூடிய தயாரிப்புகளையும் LG அறிமுகப்படுத்தியுள்ளது. இவை Customizable Wash Programs, Open API Connectivity மற்றும் முன்னிருந்து எளிதாக பயன்படுத்தக்கூடிய வடிவமைப்புடன் வருகிறது. புதிய Commercial Washer-Dryer HeatPump Combo ஒரே இயந்திரத்தில் துவைக்கும் மற்றும் உலர்த்தும் வசதியை வழங்கி, இடத்தை மிச்சப்படுத்துகிறது. கொரியாவில் அதிக தேவை இருப்பதால், இது உலகளாவிய அளவில் விரிவுபடுத்தப்படுகிறது.

தினசரி வாழ்க்கைக்கு ஸ்மார்ட் சமையலறை தீர்வுகள்

ஆசிய வீடுகளுக்கு ஏற்ற வகையில் புதிய குளிர்சாதனப் பெட்டிகளின் மாதிரிகளை LG அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த இடத்தில் அதிக சேமிப்பு திறனை வழங்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிக ஐஸ் தேவைக்கு ஏற்ப Craft Ice, Crushed Ice, Cubed Ice மற்றும் Mini Craft போன்ற பல்வேறு ஐஸ் தயாரிப்பு வசதிகள் இதில் உள்ளன.

புதிய LG Dishwasher ஒரு மணி நேரத்தில் Wash-and-dry cycle வழங்குகிறது. QuadWash Pro தொழில்நுட்பம் நான்கு Spray Arms மூலம் அதிக அழுத்த நீர்த் துளிகள் மற்றும் மைக்ரோ பபிள்ஸ் மூலம் பாத்திரங்களை முழுமையாக சுத்தம் செய்கிறது. Dynamic Heat Dry+ தொழில்நுட்பம் ஈரப்பதத்தை நீக்கி, சூடான காற்றின் மூலம் விரைவாக உலர்த்துகிறது. பல மாடல்கள் A-Grade மின்சார திறனுடன் வருகிறது.

தென் கிழக்கு ஆசிய சந்தைக்கு ஏற்ற Built-in kitchen தயாரிப்புகளாக Oven, Cooktop மற்றும் Hood ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Oven--களில் உள்ள மேம்பட்ட கேமராக்கள் மூலம் உணவு சமைக்கும் நிலையை நேரடியாக கண்காணிக்க முடிகிறது.

சிறப்பான கண்காட்சி அனுபவம்

2026 InnoFest கண்காட்சியில், முதல் முறையாக LG, தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தை பங்காளர்களுடன் இணைந்து, Interactive Sales சூழலில் நேரடி அமர்வுகளை நடத்தியது. பங்கேற்பாளர்கள் ஆசியாவின் பல்வேறு வீட்டு சூழல்களை அனுபவிக்க பல்வேறு கண்காட்சி பகுதிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த பகுதிகள் மூலம், LG தனது AI தொழில்நுட்பத்தின் மூலம் வீட்டு வேலைகளை எளிதாக்கும் எதிர்காலக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியது. AI Home Hub மற்றும் ThinQ ON  மூலம் LG சாதனங்கள் மற்றும் IoT உபகரணங்கள் வீட்டு செயல்பாடுகளை மேலும் சீராகவும் எளிதாகவும் மாற்றுகின்றன. ThinQ ON ஏற்கனவே சந்தையில் அறிமுகமாகி, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

LG Electronics நிறுவனத்தின் ஆசிய பிராந்திய நீண்டகால வளர்ச்சி திட்டத்தின் கீழ், வீட்டு மின்சாதனங்கள் உலகளாவிய அளவில் விரிவுபடுத்தப்பட்டு, மலேசியா, தாய்லாந்து, தைவான், சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் வாடிக்கையாளர்களை கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.

2026 InnoFest நிகழ்வின் போது, தனது கூட்டாளர்களுடன் இணைந்து, ஆசியா மிகவும் முக்கியமான மற்றும் செயல்திறன் மிக்க சந்தை என்பதை வலியுறுத்த முடிந்தது என்று LG

Electronics ஆசியா-பசிபிக் பிராந்திய CEO Jaeseung Kim தெரிவித்துள்ளார். AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் தயாரிப்புகள் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த LG தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருகிறது.

LG Electronics Home Appliace Solu5on நிறுவனம்

LG Home Appliance Solution (HS) நிறுவனம் உலகளாவிய அளவில் வீட்டு மின்சாதனங்கள் மற்றும் AI Home தீர்வுகளில் முன்னணி நிறுவனமாக செயல்படுகிறது. துறையின் முன்னோடியான நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மனிதர்களின் தினசரி வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக LG Home Appliance Solution தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அதிக திறன் மற்றும் எளிதான பயன்பாட்டை வழங்கும் சமையலறை உபகரணங்கள் மற்றும் வீட்டு மின்சாதனங்களை பல்வேறு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், தற்போதைய நிலையில் ரோபோ தொழில்நுட்பத்துடன் கூடிய வீட்டு மின்சாதனங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த அனைத்து தயாரிப்புகளும் சுகவசதி, மேம்பட்ட தரம் மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றை இணைத்து, பயனர்களுக்கு நிலையான மற்றும் நவீன வாழ்க்கை முறையை வழங்குகின்றன. LG பற்றி மேலும் அறிய WWW.LG.com/global/newsroom இணையதளத்தை பார்வையிடுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right