ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 36 ஆவது கூட்­டத்­தொடர் நடை­பெற்று வரும் நிலையில் அதில் பங்­கேற்­ப­தற்­காக தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் ஜெனிவா­வுக்குச் சென்­றுள்ளார்.

இலங்­கை­யி­லி­ருந்து நேற்று வியா­ழக்­கி­ழமை இரவு புறப்­பட்­டுச்­சென்ற அவர் நடைபெற்று வரும் மனித உரி­மைகள் பேரவை அமர்­விலும் அதனை அண்­மித்து நடை­பெறும் 15 இற்கும் மேற்­பட்ட உப அமர்­வு­க­ளிலும் மீளாய்வு தொடர்­பான அமர்­வு­க­ளிலும் பங்­கேற்­கவுள்­ள­தாக தமிழ் தேசிய மக்கள் முன்­னணி குறிப்­பிட்­டுள்­ளது.

அத்­துடன்  இறுதி யுத்­தத்­தின்­போது நடை­பெற்ற மனித உரிமை, மனி­தா­பி­மானச் சட்­ட­மீ­றல்கள் தொடர்பில் ஆட்­சியில் உள்ள அர­சாங்கம் ஐ.நா.சபையில் இணை அனு­ச­ரணை வழங்கி தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­னாலும், வாக்­கு­று­தி­களை அள்ளி வழங்­கி­னாலும் பொறுப்­புக்­கூறும் விட­யத்­தினை தட்­டிக்­க­ழித்தே வரு­கின்­ற­மையை சுட்­டிக்­காட்­ட­வுள்­ள­தா­கவும் தமி­ழர்கள் மீது நடத்­தப்­பட்ட இன­வ­ழிப்­புக்கு சர்­வ­தேச விசா­ரணை பொறி­மு­றை­யொன்றின் ஊடா­கவே நிதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை தமது கட்­சியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் இம்­மு­றையும் வலி­யு­றுத்­த­வுள்­ள­தா­கவும் தமிழ்த் தேசிய முன்­னணி மேலும் தெரி­வித்­துள்­ளது. முன்­ன­தாக வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளான எம்.கே.சிவா­ஜி­லிங்கம், எம்.தியா­க­ராஜா, கஜ­தீபன், புவ­னேஸ்­வரன், முன்னாள் உறுப்­பினர் மயூரன் ஆகியோர் 12 ஆம் திகதி இலங்­கை­யி­லி­ருந்து புறப்­பட்­டுச்­சென்­றி­ருந்­தனர். 

இலங்­கையில் இடம்­பெற்ற விட­யங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் கொண்­டி­ருக்கும் நிலைப்­பா­டுகள், சர்­வ­தேச விசா­ர­ணை யூ­டா­கவே நியா­ய­மான தீர்­வினைப்பெற ­மு­டியும் போன்ற விடயங்களை பல்வேறு சர்வதேச தரப்புக்களிடத்திலும் எடுத்து ரைக்கவுள்ளதாக அக்குழுவிற்கு தலைமை தாங்கிச் செல்லும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.