இன்றைய சூழலில் மாரடைப்பு பாதிப்பிற்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு நவீன பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது... அவர்களுக்கு இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் ஓர் இடத்தில் மட்டுமல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ரத்த நாள அடைப்பு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை வைத்தியர்கள் துல்லியமாக அவதானித்து.. அவர்களுக்கு நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள். இது தொடர்பாக வைத்திய நிபுணர்கள் பின்வரும் வகையில் விளக்கம் அளிக்கிறார்கள்.
இன்றைய சூழலில் எம்முடைய தலைமுறையினர் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதால்... இதய ஆரோக்கியம் குறையத் தொடங்கி இருக்கிறது. இளம் வயதிலேயே பலரும் மாரடைப்பு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
அவர்களில் சிலருக்கு இதயத்திற்கான ரத்த நாளங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட அடைப்புகளால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு சத்திர சிகிச்சை வழங்குவது என்பது வைத்திய நிபுணர்களுக்கு சவாலானதாக இருக்கிறது.
இதனை மருத்துவ மொழியில் ஹை ரிஸ்க் பெர்க்குட்டேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கொரனரி ஓஞ்சியோபிளாஸ்ரி என குறிப்பிட்டு, அதற்கான நவீன சத்திர சிகிச்சையை மேற்கொள்வார்கள்.
இத்தகைய தருணங்களில் அவர்களுக்கு ஸ்கோரிங் பலூன் தொழில்நுட்பம் மற்றும் ஒர்பிட்டல் அதேரெக்டோமி தொழில்நுட்பம் ஆகிய நவீன தொழில்நுட்பங்களை பாவித்து இடது புற இதய ரத்த நாளங்களில் உறைந்திருக்கும் கால்சிய பதிவுகளை துல்லியமாகவும் முழுமையாகவும் அகற்றி, இதயத்திற்கு ரத்த ஓட்டம் சீராக செல்லும் வகையில் சத்திர சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். சிலருக்கு இத்தகைய தருணங்களில் லேசர் தொழில்நுட்பத்தையும் பாவித்து முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.
வைத்தியர் சூரிய பிரகாச ராவ் தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM