இந்தோனேசியாவின் பிரபல புகைப்படக் கலைஞரான ஸ்லேட்டரின் கெமரா கருவியில் குரங்கொன்று தன்னைத்தானே செல்பி எடுத்துக்கொண்டது தொடர்பான காப்புரிமை வழக்கிற்கு நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

குறித்த செல்பி புகைப்படத்தால் ஈட்டப்படும் வருமானத்தில் 25 தொகையை இந்தோனேசிய சரணாலய கொண்டைவால் குரங்குகளை பராமரிக்க செலவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

குடந்த 2011 ஆம் ஆண்டு இந்தோனேசியா ஜாவா காடுகளில் ஸ்லெட்டரின் கெமராவால் எடுக்கப்பட்ட கருங்குரங்கின் செல்பியானது உலகளவில் பிரபலமானது.

உலகளவில் பிரபலமான குறித்த செல்பியை விக்கிபீடியா தனது தளத்தில் வெளியிட தனக்கு மட்டுமே உரிமையுடைய செல்பியை தன்னுடைய அனுமதியின்றி விக்கிபீடியா தனது தளத்தில் வெளியிட்டது தவறு என ஸ்லேட்டரின் அறிக்கை வெளியிட்டார்.

விக்கிபீடியா குறித்த செல்பியை குரங்கு எடுத்துள்ளது எனவே ஸ்லேட்டரின் அதற்கு உரிமை பாராட்ட முடியாது என மறுப்பு தெரிவித்திருந்தது.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக காப்புரிமை அதிகாரிகள் “ இந்த பிரச்சினைக்கு காப்புரிமை கேட்டு நிற்பது என்பது பொருந்தாத ஒரு விடயமாகும் காரணம் புகைப்படம் எடுப்பவர் அதற்கான ஒளிக்கோணம் என்பவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே புகைப்படம் எடுப்பார் அவ்வாறு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்துக்கே காப்புரிமை கோர முடியும்.

குரங்கிடம் கெமராவை கொடுத்து அது எடுத்த செல்பிக்கெல்லாம் காப்புரிமை கோர முடியாது மேலும் காப்புரிமை என்பது ஒருவரின் படைப்புக்கு கிடைக்கும் வெகுமதியல்ல மாறாக படைப்பாளியை மேலும் மேலும் ஊக்கப்படுத்தும் ஒரு தூண்டலேயாகும்” என்று ஸ்லேட்டரின்கு அறிவுறுத்தியிருந்தனர்.

இருந்தும் அறிவுரைகளை பொருட்படுத்தாத ஸ்லேட்டரின் காப்புரிமை கோரி நீதிமன்றம் வரை சென்றார். இதன் காரணமாக குறித்த வழக்கானது கடந்த சில வருடங்களாகவே அமெரிக்க உச்ச நீதிமன்றில் நடந்து வந்தது. பல வருடங்களாக இழுப்பட்டு வந்த குறித்த காப்புரிமை தொடர்பான வழக்கு அண்மையில் முடிவுக்கு வந்துள்ளது.