பார்வைத்திறன் பாதுகாப்பிற்கான புதிய விதிமுறை

Published By: Robert

14 Sep, 2017 | 04:29 PM
image

இன்றைய திகதியில் பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் வீட்டில் ஓய்வாக இருக்கும் முதியவர்கள் வரை கைகளில் கைபேசி, மடிக்கணினி, கணினி என டிஜிற்றல் இலத்திரனியல் சாதனங்களை பார்த்துக் கொண்டு தான் பொழுதுபோக்குகிறார்கள் அல்லது வருவாய் ஈட்டுகிறார்கள். இதனால் இவர்களின் கண்களும், பார்வைத்திறனும் பாதிக்கப்படுகிறது.

வறண்ட கண்கள், கண்களில் நீர் கசிவது, தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுடைய கண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து உடனடியாக கண் மருத்துவர்களை சந்தித்து பார்வைத்திறனைப் பற்றிய முழுமையான சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவும். பலரும் இதனை அலட்சியப்படுத்துவதால் சிலருக்கு சில நேரங்களில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டு, சத்திர சிகிச்சை மேற்கொண்டபின்னரும் முழுமையான நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இதனை தடுக்கவேண்டும் என்றால் முதலில் நீங்கள் உங்களின் கண்களுக்கான ஆரோக்கிய விதிமுறைகளை பின்பற்றவேண்டும்.

ஒரு நாளைக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் அல்லது 8 கோப்பை அளவிற்கு தண்ணீர் அருந்தவேண்டும். விற்றமின் ஏ சத்துள்ள ப்ரெஷ் பழங்களை சாப்பிடவேண்டும். பழங்களை சாறாக அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவது தான் நன்மை பயக்கும் என்பதையும் மறந்துவிட வேண்டாம். அலைபேசி, மடிக்கணினி, கணினி போன்றவற்றில் உள்ள டிஜிற்றல் திரையை தொடர்ச்சியாக நீண்ட நேரம் பார்வையிடாதீர்கள். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை கண்களை அதிலிருந்து அகற்றி, இருபதடி தூரமுள்ள இடத்தில் உள்ள பொருள்கள் மீது 20 விநாடி வரை பார்வையைச் செலுத்துங்கள். இது ஒரு பயிற்சி மற்றும் பார்வைதிறன் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான புதிய விதிமுறை. அதே போல் கொம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் பணியாற்றவேண்டிய கட்டாயம் இருந்தால் மறவாமல் அதற்குரிய கண்ணாடியை அணிந்து வேலை செய்யவேண்டும். இதனை பின்பற்றினால் உங்களின் கண்களின் ஆரோக்கியமும், பார்வைத்திறனும் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.

டொக்டர் அகர்வால்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29