முன்னணி நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்து ரசிகர்களை மகிழ்விப்பார்கள் இது சென்ற தலைமுறை. ஆனால் இந்த தலைமுறையில் நடிப்பிற்கு புது இலக்கணம் வகுத்து அதில் வெற்றிப் பெற்ற நடிகர் விஜய் சேதுபதி, ரசிகர்களுக்காக திருநங்கையாகவும் வேடமிட்டு நடித்து ரசிகர்களின் பாராட்டை பெறுவார். இது இந்த தலைமுறை.

ஆரண்யகாண்டம் என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பேசப்படும் இயக்குநராக கவனிக்கப்பட்டவர் குமாரராஜா. இவர் நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கேரக்டரில் நடித்திருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவருடன் மூத்த நடிகை நதியா, பஹத் பாசில், மிஷ்கின், சமந்தா, காயத்ரி, பகவதி என நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள்.

இதன் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. முதலில் பார்த்த பலரும் யாரிந்த பெண்? என்றே கேட்டனர். விஜய் சேதுபதி என்று அறிந்ததும் இதனையும் ட்ரெண்டிங் ஆக்கிவிட்டனர். ஷில்பா ரசிகர்களை ‘ஜில்’லாக்கி விடுவார்.

தகவல் : சென்னை அலுவலகம்