உலகின் நீளமான கால்களை உடைய பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரான ரஷ்யாவின் ‘எகெதெரினா லிசினா’ (29), ஹொலிவுட் திரையுலகில் ‘கால்’ எடுத்து வைக்கிறார். இத்தகவலை அவர் இன்று நடைபெற்ற நேர்காணல் ஒன்றின்போது தெரிவித்தார்.

அவரை நேர்கண்ட தொகுப்பாளர்கள் ஏணி மீது ஏறியபடி நேர்கண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆறு அடி ஒன்பது அங்குல உயரமுள்ள லிசினாவின் கால்களின் நீளம் மட்டும் 52.4 அங்குலம். இந்தச் சாதனை(!)க்காகவே அவரது பெயர் 2018க்கான கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார்.

இந்த விசேட அம்சமே அவரை ஹொலிவுட்டில் கால் பதிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 

ஒலிம்பிக்கில் கூடைப் பந்தாட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்குச் சொந்தக்காரரான இவர், ‘ரக்பி கேர்ள்ஸ்’ என்ற புதிய ஹொலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

லிசினாவுக்குத் திருமணமாகி ஆறு வயதில் ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையிலேயே அவருக்கு திரைப்பட வாய்ப்பு கதவைத் தட்டியிருக்கிறது.