வீர வீராங்கனைகள் அனைவரும் இணைந்து தெற்காசியப் போட்டிகளில் இலங்கைக்கு வெற்றியைத் தேடித் தாருங்கள். அதை மட்டும்தான் உங்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்ததார்.
12ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடைபெறுகிறது.
இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் வீர வீராங்கனைகள் அனைவரும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இதில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில்,
வீர வீராங்கனைக ளுக்கு தேவையான அனைத்தையும் நாம் செய்துவிட்டோம். இதற்கு பிரதியுபகாரமாக உங்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது பதக்
கங்களைத்தான். அனைவரும் ஒன்றுகூடி உழைத்து இலங்கைக்கு தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றியைத் தேடித் தாருங்கள்.
இந்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு 5 இலட்சம் ரூபாப் பணப்பரிசும்இ வெள்ளிப் பதக்கம் வெல்
பர்களுக்கு 3 இலட்சம்
ரூபாவும் வெண்கலப் பதக்கம் வெல்பவர்க ளுக்கு 1 இலட்சம் ரூபா
வீதமும் பரிசுகளை வழங்க நாம் எதிர்பார்த் திருக்கிறோம். அனைத்து வீரர்களுக்கும் திறமை யை வெளிப்படுத்தி பதக்கங்களை குவிக்க எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM