அடிசியோலிசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர சிகிச்சை

24 Apr, 2026 | 05:37 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய பெண்மணிகளில் பலருக்கும் வைத்திய சிகிச்சைகளுக்கு கட்டுப்படாத வகையில் நாள்பட்ட வயிற்று வலி அல்லது இடுப்பு பகுதி வலி உண்டாகும்.

இதற்கு அடிசியோலிசிஸ் எனும் பாதிப்பின் அறிகுறியா..? என்பதை அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று, வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதனைத் தொடர்ந்து அதற்குரிய நவீன சத்திர சிகிச்சையையும் செய்து முழுமையான நிவாரணம் பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

நாட்பட்ட வயிற்று வலி, தாங்க இயலாத வயிற்று வலி, இடுப்பு  வலி, குடல் அடைப்பு காரணமாக ஏற்படும் வாந்தி, மலச்சிக்கல்... ஆகிய அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு அடிசிலியோசிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என அவதானிக்கலாம்.

எம்முடைய வயிற்றின் உள்பகுதியில் உள்ள திசுக்களும், உடல் உறுப்புகளும் வழக்கத்திற்கு மாறாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும் போது உருவாகும் இழைத்திசு பட்டைகளே அடிசிலியோசிஸ் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படுகிறது.

இத்தகைய பாதிப்பு பெரும்பாலும் வயிறு அல்லது இடுப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் காரணமாகவும், அங்கு ஏற்படும் தொற்று பாதிப்பு அல்லது அழற்சியின் காரணமாகவும் உண்டாகின்றன. சில பெண்களுக்கு குடல், கருப்பை , சினைப்பை , வயிற்றுப் பகுதியில் உள்ள இணைப்பு திசுக்கள்... ஆகியவை இதனால் பாதிக்கப்படும்.

சிலருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படும்போது உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும். அதனை புறக்கணித்தாலோ அல்லது அலட்சியப்படுத்தினாலோ இதன் காரணமாகவும் மலட்டுத்தன்மை ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்பை துல்லியமாக அவதானிக்க நவீன ஸ்கேன் பரிசோதனைகள் மற்றும் குருதி பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து லேப்ராஸ்கோபிக் மூலமாகவோ அல்லது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரொபோக்கள் மூலமாகவோ சத்திர சிகிச்சை மேற்கொண்டு இதற்கு முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது.

வைத்தியர் மஞ்சுளா தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கன்ஸ்டிரிக்டிவ் பெரிகார்டிடிஸ் எனும் இதய பாதிப்பிற்கான...

2026-06-12 14:16:00
news-image

அஸ்பெர்கில்லோமா எனும் நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன...

2026-06-11 17:22:11
news-image

உடற்பருமனால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினரின் எண்ணிக்கை...

2026-06-10 16:00:56
news-image

க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம் எனும் முழங்கை...

2026-06-09 18:18:06
news-image

இதய செயலிழப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் இம்பெல்லா...

2026-06-09 07:16:20
news-image

புரோஸ்டேட் சுரப்பி வீக்க பாதிப்பிற்கான நவீன...

2026-06-08 17:01:59
news-image

அயோட்டிக் டிஸ்சக்சன் எனும் இதய ரத்த...

2026-06-05 16:14:23
news-image

தழும்புகளற்ற தைரொய்க்டொமி எனும் நவீன சத்திர...

2026-06-04 17:33:23
news-image

மெட்டபொலிக் என்செபலோபதி ஹைபோநெட்ரீமியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-06-03 15:08:28
news-image

தனிமை அதிகமானால் குருதி அழுத்த பாதிப்பும்...

2026-06-02 17:55:09
news-image

நார்த்திசு கட்டிகளை அகற்றுவதற்கான நவீன சிகிச்சை

2026-06-01 14:38:53
news-image

தேசிய வைத்தியசாலையில் ரூ.99 மில்லியன் செலவில்...

2026-06-01 04:59:15