உத்தரப் பிரதேசத்தின் பக்பாத் என்ற பகுதியில், யமுனை ஆற்றில் ஹரியானா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலில் அளவுக்கதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.

நதியின் நடுப் பகுதியை அடைந்த அந்தப் படகு, நிலை தடுமாறி நதியில் சரிந்து மூழ்கியது.

இதையடுத்து மீட்புக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர்.

என்றபோதும், இதுவரை பன்னிரண்டு பயணிகளே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 22 பேரின் உயிரற்ற உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. எஞ்சியவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.