மரக்கறி வகைகளில் விலை காட்சி படுத்தபடாமையால், அதன் விலையினை விசாரித்த மூதாட்டியின் கன்னத்தில் பெண் அறைந்த சம்பவம் மலேசிய மக்கள் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் தைப்பிங், பேராக் பகுதியில் அமைந்துள்ள சந்தையில் குறித்த சம்பவம் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தையிற்கு மரக்கறி கொள்வனவிற்கு வந்த 71 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர், மரக்கறியின் விலைகள் காட்சி படுத்தபடாமையால் அக்கடையில் பணியாற்றும் பெண்ணிடம் மரக்கறியின் விலையினை விசாரித்துள்ளார்.

இதனால், சினமடைந்த குறித்த கடையில் பணியாற்றும் பெண் மூதாட்டியின் கன்னத்தில் அறைந்துள்ளதோடு, அவரின் கைத்தடியினை பறித்து அவரை தாக்கவும் முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.