கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிப்பு : ஜனாதிபதி அநுர, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை சாட்சியாளராக அழையுங்கள் - விசேட செயற்குழு உறுப்பினர்கள் கோரிக்கை

Published By: Vishnu

22 Apr, 2026 | 07:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் பௌதிக பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடும் பாராளுமன்ற விசேட  செயற்குழுவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமைச்சர் பிமல் ரத்நாயக்க,பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோரை சாட்சியாளராக அழைக்குமாறு குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விசேட செயற்குழுவின் உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, தயாசிறி ஜயசேகர,முஜிபூர் ரஹ்மான் மற்றும் டி.வி. சானக ஆகியோர் குழுவின் தலைவரான நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்வலன்கள் பௌதிக பரிசோதனைகளின்றி,விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு நிதி திட்டமிடல்,பொருளாதார அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

குறித்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,பிரதி அமைச்சராக பதவி வகித்த ருவான் கொடித்துவக்கு, மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோர் சாட்சியமளிப்பதற்கு சாட்சியாளர்களாக அழைக்கப்பட வேண்டும்.

அதேபோல் குறித்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் சுங்கத் திணைக்களத்தின் தொடர்பு குறித்து மற்றும் இந்த செயற்குழுவின் விடயதானங்களுக்குட்பட்ட விடயங்கள் குறித்து நிதியமைச்சர் என்ற அடிப்படையால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் இந்த செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35