இரத்தினபுரி, கஹவத்தை நீலகாமம் இலக்கம் 01 பிரிவில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீடு மர்மக் கும்பலால் அடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தங்களை தோட்டப் பாதுகாப்புப் பிரிவினர் என அடையாளப்படுத்திக்கொண்டு, கறுப்பு ஆடை மற்றும் தலைக்கவசம் அணிந்து வந்த கும்பல் ஒன்று இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டுள்ளதாகத் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலின்போது வீட்டில் இருந்தவர்கள் மீது அந்தக் கும்பல் சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், இதில் படுகாயமடைந்த தொழிலாளி ஒருவர் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு பிரதி அமைச்சர் தோட்ட நிர்வாகத்திற்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
வீடு உடைக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை. எனினும், தோட்டப்பகுதிகளில் இவ்வாறான குண்டர் கலாசாரமும் மர்மக் கும்பல்களின் அச்சுறுத்தலும் அதிகரித்து வருவது குறித்து மலையக மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவுகிறது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM