நடிகர் சூர்யாவின் திரைப்படத்தில் நடிக்கவிருந்த இலங்கையை சேர்ந்த நபர் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு

22 Apr, 2026 | 05:54 PM
image

(நமது நிருபர்)

தென்னிந்திய திரையுலகின்  முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் ”கருப்பு“ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவிருந்த இலங்கையைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் மாரடைப்புக் காரணமாகத் திடீரென உயிரிழந்துள்ளதாக கருவாத்தோட்டம் பொலிஸார்  தெரிவித்திருந்தனர்.

நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கும் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில்  தற்போது நடைபெற்று வருகின்றன.

இங்கு இந்திய பாராளுமன்றத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான பிரம்மாண்டமான காட்சிகள் படமாக்கப்படவிருந்தன.  இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (21) படப்பிடிப்புத் தளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத் தயாராக இருந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த கலைஞரான அழகர் கருப்புசாமி போஸ் என்பவர் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள கழிவறையில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

திடிர் மாரடைப்பே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.  உயிரிழந்தவர் மாத்தளை, களுதாவலை  இரத்தோட்டை பகுதியை  சேர்ந்த 52 வயதுடைய அழகர் கருப்புசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் திருமணமாகாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கறுவாத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23