உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி சிறையிலிருக்கின்றார் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

22 Apr, 2026 | 04:40 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி சிறையிலிருக்கின்றார். நாட்டில் முன்னெடுக்கப்படும் 'சமாதான நடைபயணம்' போன்ற செயல்பாடுகள் வரவேற்கத்தக்கவை. என்றாலும், நடைபயணம் செல்வது மட்டும் போதாது. சமாதானத்திற்காக நடைமுறையில் எந்தவொரு செயல்பாடும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.  

அத்தனகல்ல பகுதியில் செவ்வாய்கிழமை (21) இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதிலளித்த அவர்,

அனைத்து நல்ல விடயங்களும் அத்தனகல்லவிலிருந்தே ஆரம்பிக்கின்றன. அரசாங்கம் மற்றும் நாட்டு மக்களுக்குத் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன். நாட்டில் முன்னெடுக்கப்படும் 'சமாதான நடைபயணம்' போன்ற செயல்பாடுகள் வரவேற்கத்தக்கவை. என்றாலும், நடைபயணம் செல்வது மட்டும் போதாது. சமாதானத்திற்காக நடைமுறையில் எந்தவொரு செயல்பாடும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை என்றார்.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு தினம் குறித்துக் கேட்கப்பட்ட போது, ஈஸ்டர் தாக்குதலின் 'சூத்திரதாரி' அல்லது அதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர் இப்போது சிறையில் இருக்கிறார் என்று அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்குச் சரியான நீதி வழங்கப்பட்டு சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35