மே மாதத்தில் வெளியாகும் நடிகர் விது நடிக்கும்' 29'

21 Apr, 2026 | 05:12 PM
image

நடிகர் விது கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் அறிமுகமாகும் '29 ' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக காணொளி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் - கதாசிரியர் - வசனகர்த்தா-  என படைப்பு ஆளுமை மிக்க ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள '29 ' திரைப்படத்தில் விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஒவ்வொருவரது வாழ்க்கையில் 29 ஆவது வயது என்பது முக்கியம் என்பதால்... அதனை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ மற்றும் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்... இந்தத் திரைப்படம் எப்போது வெளியாகும் ?என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் எட்டாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக காணொளி மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே 'அயோத்தி' மற்றும் 'கிஸ்' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரீத்தி அஸ்ராணி இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருப்பதால்.. இளம் ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமகால பிரச்சனைகளை உரத்துப் பேசும் ஜெய்யின்...

2026-05-12 14:55:36
news-image

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழ் கலாசாரத்தின் குரல்:...

2026-05-12 13:20:05
news-image

29 - திரைப்பட விமர்சனம்

2026-05-11 16:47:59
news-image

ஜூன் மாதத்தில் வெளியாகும் புதுமுகங்கள் நடித்திருக்கும்...

2026-05-11 16:27:20
news-image

நடிகர் சூர்யாவின் 'கருப்பு' படத்தின் முன்னோட்டம்...

2026-05-11 16:26:17
news-image

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் 'வாரண்ட்'...

2026-05-11 16:17:16
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'கான் சிட்டி'...

2026-05-11 15:15:36
news-image

ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த சந்தீப் கிஷன்...

2026-05-11 15:14:08
news-image

ஓகஸ்டில் ரசிகர்களை 'ஐ அம் கேம்...

2026-05-11 15:04:47
news-image

காதலும், இன்னிசையும் கலந்து தயாராகும் 'சைக்கிள்...

2026-05-11 14:58:11
news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00