கால்நடைகள் மீது காரைநகரில் அடாவடி ; பண்ணையாளர்கள் போராட்டம்

Published By: Digital Desk 3

21 Apr, 2026 | 03:41 PM
image

(எம்.நியூட்டன்)

கால்நடை வளர்ப்போர் மீது திணிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகளினால் பண்ணையாளர்கள் நாளாந்தம் பல கால்நடை வளர்ப்போர் மீது திணிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகளினால் பண்ணையாளர்கள் நாளாந்தம் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரியும் காரைநகர் கால்நடை வளர்ப்போர் சுயாதீனக் குழு அடையாளப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நாங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் அல்ல. கமநல சேவைத் திணைக்களம் கமநலக் குழு மற்றும் காரைநகர் பிரதேச சபை என்பனவே இந்த ஒடுக்குமுறைகளுக்கு முக்கியமானவர்களாக இருக்கின்றனர்.

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலபோக நெற்செய்கைக்காக கட்டப்பட்ட கால்நடைகள் அவிழ்த்து விடுவதற்கான அனுமதிகள் இன்னும் கிடைக்கவில்லை.

ஒரு சில விவசாயிகள் மேற்கொள்ளும் சிறுதானிய செய்கைக்காக தொடர்ச்சியாக கட்டி வைக்கப்படுகின்றன.

கடுமையான வெப்பம் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை நிலவுகின்ற சூழ்நிலையிலும், ஒழுங்கான மேய்ச்சல் தரை இல்லாத காரணத்தினாலும் தொடர்ச்சியாக கால்நடைகளைக் கட்டி வளர்ப்பது முடியாத விடயமாக உள்ளது.

அதேநேரம் சிறுதானியம் விதைப்பவர்களுக்கு வேலிகளை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

இந்த தடையைக் காரணம் காட்டி, சிறு தானியம் செய்கை பண்ணப்படாத இடத்திலும் மற்றும் கடற்கரையோரமாகவும் மேயும் கால்நடைகளை கைப்பற்றி, கமநலக் குழுவும் மற்றும் காரைநகர் பிரதேச சபையும் பெருந்தொகைப் பணம் அறவீடு செய்வது அநீதியானதாகும்.

கால்நடை வளர்ப்போருடன் கலந்துரையாடாமல், விவசாய சம்மேளனமும், பிரதேச சபையும் ஏதேச்சாதிகாரமாக தண்டப்பணத்தினை அறவிடுகின்றன.

கால்நடை வளர்ப்போர் ஏழைகளாக இருப்பதினால், தண்டப்பணத்தினை கட்டுவதற்காக தமது கால்நடைகளை விற்பனை செய்வதற்கு தள்ளப்படுகின்றனர்.

இது, காரைநகரில் கால்நடை வளர்ப்பினை இல்லாமல் ஒழிக்கும் உள்நோக்கம் கொண்டதாகும்.

பிடிபட்ட கால்நடைகளை பாரமரிப்பு என்னும் பேரில் பெருந்தொகைப் பணம் அறவிடப்படுகின்றபோதிலும், கால்நடைகள் ஒழுங்காக பராமரிக்கப்படுவதில்லை.

உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் போது, அவை நோய்வாய்ப்பட்டவையாகவே மாற்றப்படுகின்றன.

கால்நடைகளைப் பிடிக்கும் போது, பிடிப்பவர்களால் காட்டுமிராண்டித்தனமாக அவைகள் சித்தரவதை செய்யப்படுகின்றன. இது சட்டவிரோதமானதாகும்.

அதனடிப்படையில், பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத இடங்களில் மேயும் கால்நடைகளை பிடிக்க கூடாது. அவ்வாறு பிடிபடும் கால்நடைகள் பற்றிய விபரங்களை உடனடியாக உரிமையாளர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.

பிடிபட்ட கால்நடைகளை உரிமையாளர்கள் திரும்ப பெறச் செல்லும்போது, அவர்களை அலைக்கழிப்பதை நிறுத்தப்பட வேண்டும்.

பிடிபடும் கால்நடைகளுக்கான தண்டப் பணத்தினைக் குறைக்க வேண்டும்.

கால்நடைகள் கட்டப்படும் காலப்பகுதியில், பொருத்தமான மேய்ச்சல் தரவை ஒன்றை அரசாங்கம் ஒதுக்கித் தர வேண்டும்.

கோடை காலத்தில் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்து தர வேண்டும்.

கால்நடை கட்டப்படும் காலத்தில் இலவசமாக அல்லது மானிய அடிப்படையில் கால்நடைத் தீவனம் வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

15 ஆம் திகதி தொடக்கம் கால்நடைகள் வீதிகளில் திரிய விடாமல் கட்டி வளர்க்க வேண்டும், என காரைநகர் பிரதேச சபையினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை வருடம் பூராவும் கால்நடைகளைக் கட்டி வளர்க்க வேண்டுகோள் விடுக்கின்றது. அவ்வாறான இந்த தீர்மானத்தை மீளப்பெற வேண்டும்.

பிடிபடும் கால்நடைகளை ஏலத்தில் விற்பனை செய்வதை நிறுத்தி, உரிமையாளருக்கு மீண்டும் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35
news-image

வாடகை வீடுகள் மூலம் நிதி மோசடிகள்:...

2026-05-11 16:18:22