சைட்டம் தனியார் மருத்­து­வக்­கல்­லூரி தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்­சை­களை தீர்ப்­ப­தற்­காக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து இன்று நான்காவது நாளா­கவும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் தொடர்ச்­சி­யான பணிப்­ப­கிஷ்­க­ரிப்­பினை முன்­னெ­டுக்­கவுள்ளது. 

Image result for அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் virakesari

கடந்த திங்­கட்­கி­ழமை முதல் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் பணி­ப் ப­கிஷ்­க­ரிப்பின் நான்காவது நாளான இன் ­றைய தினத்தில் அனு­ரா­த­புரம், குரு­நாகல், கண்டி, இரத்­தி­ன­புரி மற்றும் காலி ஆகிய ஐந்து மாவட்­டங்­களில் ஒருநாள் அடை­யாள வேலை நிறுத்­தத்­தினை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் அச்­சங்­கத்தின் செய­லாளர் வைத்­தியர் நவீந்த டி சொய்சா தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

சைட்டம் மாலபே தனியார் மருத்­துவ கல்­லூரி தொடர்பில் எழுந்­துள்ள நடை ­முறை சிக்கல் குறித்து ஆராய்ந்து அறிக்­கை­யொன்­றினை தயா­ரிப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ்­வாறு நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்­கை­யா­னது சிலரின் அர­சியல் தேவைப்­பா­டு­க­ளுக்­க­மைய மாலபே தனியார் மருத்­து­வக்­கல்­லூரி சட்ட ரீதி­யா­னது என்­பதை காட்­டு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றது.

இதே­வேளை கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் தொடர்ச்­சி­யாக சைட்டம் மருத்­துவ கல்­லூ­ரியை தடை­செய்­ய வேண்டும் அல்­லது அதனை அர­சு­ட­மை­யாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்­வைத்து வரு­கின்றோம். அதற்­காக பல்­வேறு போராட்­டங்­க­ளையும் வேலை­நி­றுத்­தத்­தி­னையும் மேற்­கொண்டு வரு­கின்றோம். இருப்­பினும் இது­வ­ரையில் அர­சாங்­கத்­தினால் எவ்­வித தீர்வும் முன்­வைக்­க­ப்படவில்லை. 

என­வேதான் இதற்கு எதி­ரா­கவும் சைட் டம் மாலபே தனியார் மருத்­துவ கல்­லூ­ரியை தடை செய்தல் உள்­ளிட்ட பல்­வேறு கோரிக்­கைகளை முன்­வைத்து இந்த போரா ட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ளோம். மாவட்ட ரீதியில் சுழற்சி முறையில் சகல வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் இந்த போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் எதிர்­வரும் 15 ஆம் திகதி வரையில் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம். இதன்­போது வேலை­நி­றுத்தம் இடம்­பெறும் மாவட்­டங்­களின் வைத்­தி­ய­சா­லை­களில் சைட்டம் எதிர்ப்பு பதா­கைகள் மற்றும் கறுப்­புக்­கொடி என்­ப­னவும் பறக்­க­வி­டப்­படும். அத்­துடன் இது தொடர்பில் மாவட்ட ரீதியில் மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தொடர்­வா­கன பேர­ணி­யொன்­றி­னையும் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இந்த பேர­ணி­யா­னது எதிர்­வரும் 16 ஆம் திகதி கொழும்பை வந்­த­டையும் என்றார்.