(இணையத்தள செய்தி பிரிவு)
பாதாள உலகக் குழுத் தலைவர் “கஞ்சிபானை இம்ரான்” உடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவர், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய, கடந்த திங்கட்கிழமை (20) ஜா-எல, கால வீதி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்போது வெளிநாட்டில் தங்கியிருப்பதாகக் கருதப்படும் கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய சகா இவரெனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஏ.எஸ்.பி வூட்லர் தெரிவித்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM