(இணையத்தள வவுனியா செய்தியாளர்)
வவுனியா மாவட்டத்தில் தித்வா புயல் காரணமாக பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
தித்வா புயலினால பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான நிவாரணமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபா 5 இலட்சம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக ரூபா 3 இலட்சம் பெறுமதியான காசோலைகள் வழங்கப்படுகின்றன.
வவுனியா மாவட்டத்தில் மொத்தமாக 669 பேருக்கு குறித்த காசோலை வழங்கப்படவுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, இன்று செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட 476 பேரில் முதற்கட்டமாக131 பேருக்கு காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
செட்டிகுளம் பிரதேச செயலாளர் கே.சுலோஜினி, தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்க, வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் நா.கமலதாசன், செட்டிகுளம் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM