முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது!

Published By: Digital Desk 1

21 Apr, 2026 | 04:13 PM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் இன்று செவ்வாய்க்கிழமை (21) நுவரெலியா பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

நுவரெலியாவிற்கு சுற்றுலா நிமிர்த்தம் குடும்பத்தினருடன்  வருந்திருந்த இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர அவிசாவளை பகுதியிலிருந்து சுற்றுலா வந்திருந்த ஒரு குழுவினருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், பிரேமலால் ஜெயசேகர தனது கையிலிருந்த கைத்துப்பாக்கியைக் காட்டி அக்குழுவினரை மிரட்டியுள்ளார்.

 அதன் பின்னர் நுவரெலியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம்  நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம ஆய்வாளர் ரவீந்திர பிரேமலால் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு, சந்தேகத்தின் பேரில் பிரேமலால் ஜெயசேகரவைக் கைது செய்துள்ளனர் .

நுவரெலியாவில் ஒருவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய குற்றச்சாட்டிலும் , அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கியை தன்னகத்தே வைத்திருந்த குற்றச்சாட்டிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவிடம் கைப்பற்றிய துப்பாக்கி தொடர்பான உரிமத்தை ஆய்வு செய்தபோது இதற்காக உரிமம், 2025.01.23 ஆம் திகதி அன்று ஓராண்டு காலத்திற்கு வழங்கப்பட்டதால், அதன் காலாவதி தற்போது  முடிந்துவிட்டது எனவும் AF669 என்ற எண்ணைக் கொண்ட 9 மி.மீ CZ75 ரக துப்பாக்கியும்  அதனுடன் 10 தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

தொடர்ந்து விசாரணையின் பின்னர் சந்தேகநபர் நுவரெலியா மாவட்ட  நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23