நீதியை நிலைநாட்டுவதில் அசமந்தப்போக்குடன் செயற்பட்டால் சர்வதேச விசாரணையை கோருவதே சரியான வழி - உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு நாளில் பேராயர்

Published By: Digital Desk 1

21 Apr, 2026 | 01:05 PM
image

(இணையத்தள செய்திப்பிரிவு)

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்று ஏழு வருட நிறைவடைந்துள்ள நிலையில், நீதியை நிலைநாட்டும் விடயத்தில் அரசாங்கம் அசமந்தப்போக்குடன் செயற்பட்டால், சர்வதேச விசாரணையை கோருவதே சரியான வழி என கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்று ஏழு வருட நிறைவை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட நினைவேந்தல் மற்றும் ஆராதனை நிகழ்வில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் ஏழு ஆண்டுகள் கடந்தும், இந்த கொடூர தாக்குதலுக்குப் பின்னால் இருந்த உண்மையான சூத்திரதாரிகள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என கவலை வெளியிட்டார்.

கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நீதியை நிலைநாட்டும் வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், அவை அரசியல் தேவைகளுக்காக விசாரணைகளை திசைதிருப்பியதாக இதன்போது அவர் குற்றம் சுமத்தினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

தாக்குதல் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகளை கவனிக்கத் தவறிய அதிகாரிகள் மற்றும் அதனை மூடிமறைத்தவர்கள் மீதான சட்ட நடவடிக்கை இன்னும் மந்தகதியிலேயே உள்ளது. 

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்தாலும், அவை இன்னும் கீழ்மட்டத்திலேயே இருக்கின்றன. தாக்குதலில் முன்னோடியாக செயற்பட்டவர்களைக் கண்டறிய இன்னும் தீவிர நடவடிக்கைகள் தேவை.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளில் இன்னும் பகிரங்கப்படுத்தப்படாத பகுதிகள் மற்றும் இரகசிய ஆவணங்கள் குறித்து அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.

விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் அல்லது கடந்த காலங்களில் தகவல்களை மறைத்த பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இன்னும் உயர் பதவிகளில் நீடிப்பது விசாரணைகளின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.

நீதியை நிலைநாட்டும் விடயத்தில் அரசாங்கம் அசமந்தப்போக்குடன் செயற்பட்டால், சர்வதேச விசாரணையை கோருவதே சரியான வழி என அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும், காயமடைந்தவர்களுக்கும் திருச்சபை என்றும் துணை நிற்கும் என அவர் இதன்போது உறுதியளித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35