தமி­ழர்­களின் அர­சியல் உரிமை தொடர்பில் சிங்­கள பௌத்த ஆதிக்­கத்தின் நிலைப்­பாட்டில் மாற்­றங்கள் இல்லை. கொடுப்­பதை வாங்­கிக்­கொண்டு இருக்க வேண்டும் என்றே அவர்கள் இன்னும் கரு­து­கின்­றனர். எனவே நிலை­யான மாற்­றத்­திற்­காக கடி­ன­மாக முயற்­சிக்க வேண்டும் என வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னே­ஸ்வரன் தெரி­வித்தார்.

Image result for சி.வி. விக்­னே­ஸ்வரன் virakesari

மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்­களின் மகா­நா­யக்­கர்­க­ளு­ட­னான சந்­திப்பு தொடர்பில் நேற்று புதன்கிழமை தெளிவு­ப­டுத்­து­கை­யி­லேயே வட மாகாண முத­ல­மைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்­களின் மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்­க­ளாக சந்­திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்­பிற்கு அமை­வாக சிறந்த சந்­திப்பை என்னால் முன்­னெ­டுக்க முடிந்­தது. 

அஸ்­கி­ரிய மகா­நா­யக்­க­ரு­டனான சந்­திப்­பா­னது தனிப்­பட்­ட­தாக அமை­ய­வில்லை. மாறாக உத்­தி­யோ­க­பூர்­வ­மா­ன­தாக அஸ்­கி­ரிய பீடத்தின் முக்­கிய மகா­நா­யக்க தேரர்கள் சந்­திப்பில் கலந்து கொண்­டனர். 

எவ்­வா­றா­யினும் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புகள் மற்றும் நிலைப்­பா­டு­களை மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்­க­ளுக்கு அறிய கொடுத்தோம். சமஷ்டி என்ற சொல் தொடர்பில் முன்­கூட்­டியே தீர்மானம் ஒன்றில் உள்­ளனர். இலங்­கைக்கு எதி­ரா­னது, பிரி­வி­னை­வாதம் மற்றும் நாட்டை துண்­டாடி விடும் என்­கின்­றது போன்று அவர்கள் சமஷ்டி தொடர்பில் நிலை­யான தீர்­மா­னத்தை வைத்­துள்­ளனர். 

இத­னூ­டாக சிங்­கள பௌத்த ஆதிக்­கத்தின் நிலைப்­பாடு வெளிப்­பட்­டுள்­ளது. இந்த நிலைப்­பாட்டை மாற்­று­வ­து கடி­ன­மா­னது என்­றாலும் இய­லு­மா­ன­தொன்­றா­கவே உள்­ளது. அர­சியல் தீர்வு என்ற விட­யத்­திற்கு செல்லும் போது ஒற்­றை­யாட்சி என்று கூறு­கின்­றனர். அதில் தமிழ் மக்­களின் தீர்வு விடயம் எவ்­வாறு உள்­ளது என்­பது குறித்து பேசு­வ­தாக இல்லை. 

கொடுப்­பதை வாங்­கிக்­கொண்டு தமி­ழர்கள் இருக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாடே காணப்படுகின்றது. எனவே இன்னும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஏனைய தரப்புகளையும் சந்தித்து பேசலாம் என்று நினைத்துள்ளேன் என தெரிவித்தார்.