ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி நியமனம்

21 Apr, 2026 | 09:54 AM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

15 ஆண்டுகால சாதனைகளுக்குப் பின்னர், டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக, நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் பிரிவின் தலைவராக இருக்கும் ஜோன் டெர்னஸ் செப்டம்பர் மாதம் முதல் பொறுப்பேற்கிறார்.

2011 இல் ஸ்டீவ் ஜோப்ஸிடமிருந்து பொறுப்பேற்ற டிம் குக், ஆப்பிள் நிறுவனத்தை ஒரு நிதி ரீதியான சக்தியாக மாற்றினார்.

ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பை 1 டிரில்லியன் டொலரிலிருந்து 4 டிரில்லியன் டொலராக அதிகரித்த பெருமை இவருக்கு உண்டு.

ஒரு சிறந்த ஒரு 'வணிக நடத்துனராக தளவாடங்கள் மற்றும் விற்பனையில் ஆப்பிளை உலகளவில் முதலிடத்திற்கு கொண்டு சென்றார்.

குக் தற்போது  நிறைவெற்று தலைவராக பொறுப்பு வகிக்கவுள்ளார்.

ஆப்பிளில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்ட டெர்னஸ், ஒரு பொறியாளர் பின்னணியைக் கொண்டவர்.

ஐபேட் (iPad), ஐபோன் (iPhone), ஏர்போட்ஸ் (AirPods) மற்றும் ஆப்பிள் வொட்ச் (Apple Watch) போன்ற அனைத்து முக்கிய தயாரிப்புகளிலும் பணியாற்றியுள்ளார்.

மேக் கணினிகளில் ஆப்பிளின் சொந்த சிலிகான் சிப்புகளைப் பயன்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை முன்னின்று நடத்தினார்.

சமீபகாலமாக ஆப்பிள் நிறுவனம் புதுமையான தயாரிப்புகளைத் தருவதில்லை என்ற விமர்சனம் உள்ளது.

டிம் குக் ஒரு செயல்பாட்டு நிபுணர் ஆனால் டெர்னஸ் ஒரு தயாரிப்பு நிபுணர் . இவரது நியமனம், ஆப்பிள் மீண்டும் புதிய மற்றும் வித்தியாசமான தயாரிப்புகளில்  கவனம் செலுத்தப் போவதைக் காட்டுகிறது.

மைக்ரோசொப்ட் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் சற்று பின்தங்கியுள்ளது. டெர்னஸ் அதனை ஆப்பிள் சாதனங்களுடன் ஆழமாக இணைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக...

2026-09-01 15:16:48
news-image

Gemini Omni: கூகுளின் மல்டிமாடல் ஏஐ...

2026-08-29 14:07:18
news-image

ASUS இடமிருந்து AI-வலுவூட்டப்பட்ட பிரதான ExpertBook...

2026-08-13 15:49:36
news-image

கணினி, கையடக்கத் தொலைபேசிகளின் வேகத்தை அதிகரிக்கும்...

2026-08-11 11:17:38
news-image

கட்டுப்பாட்டை மீறி இணையத்தை ஊடுருவிய ஓபன்...

2026-07-29 14:59:15
news-image

சமூக வழிகாட்டுதலை மீறியதால் இலங்கையில் 4.4...

2026-07-21 11:55:51
news-image

சீனாவின் ஷென்செனில் உலகின் முதல் வர்த்தக...

2026-07-17 14:01:03
news-image

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஊக்குவிக்கும்...

2026-07-06 14:29:31
news-image

வட்ஸ்அப்பில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'யூசர்நேம்' வசதி...

2026-06-30 10:08:48
news-image

அதிநவீன செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு தற்காலிக...

2026-06-06 14:35:10
news-image

வட்ஸ்அப்புக்கான முக்கிய புதிய அம்சத்தை அறிவித்தது...

2026-05-14 12:00:55
news-image

அண்ட்ரோய்ட் 6 க்கும் குறைந்த பதிப்புகளை...

2026-04-27 14:30:40