(இராஜதுரை ஹஷான்)
சந்தை விலைக்கு மாறாக அதிக விலைக்கு விலைமனுகோரல் செய்யப்பட்டு, 586 கோடி ரூபாவுக்கு டீசல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மிக மோசமான திருடர். முடிந்தால் அவர் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம் அப்போது பல விடயங்கள் வெளிவரும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் வலுசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நிலக்கரி இறக்குமதி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி குறித்து ஆராய்வதற்கு இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 06 மாத காலம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
06 மாத காலத்துக்குள் 2009 ஆம் ஆண்டு முதல் விசாரணைகளை மேற்கொள்வது சாத்தியமற்றது. அவ்வாறு செயற்பட்டால் 2026 ஆம் ஆண்டு நிலக்கரி மோசடி மூடி மறைக்கப்படும்.ஆகவே ஆணைக்குழுவின் காலத்தை நீட்டிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்.
ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் சாட்சியங்கள் மற்றும் முன்வைக்கப்படும் விடயங்களின் இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்றன. தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்படவில்லை. எவ்வித மோசடிகளும் இடம்பெறவில்லை என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆகவே நாட்டு மக்கள் மத்தியில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. ஆகவே ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அனைத்தும் வெளிப்படையானதாக இருத்தல் வேண்டும். மக்கள் சகல விடயங்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிப்பதற்காகவே பதவி விலகியதாக குமார ஜயகொடி குறிப்பிடுவதை ஏற்க முடியாது. ஏனைய நாடுகளை காட்டிலும் இலங்கை அதிக டொலருக்கு டீசல் கொள்வனவு செய்துள்ளதாக எச்.எஸ்.பி.சி நிறுவனத்தின் பிரதானி குறிப்பிட்ட விடயம் அரசாங்கத்துக்குள் பாரிய முரண்பாட்டை ஏற்படுத்தியது.
நிலக்கரி விவகாரத்தில் குமார ஜயகொடியை காப்பாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டீசல் கப்பல் விவகாரத்தில் குமார ஜயகொடியை கைவிட்டுவிட்டார்.சிங்கப்பூரின் 'பிளட்'விலைச்சுட்டெண்ணுக்கமைய எரிபொருள் கொள்வனவு செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிடுகிறது.
ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் டீசல் ஒரு பீப்பாயின் விலை 224 டொலராக காணப்பட்டது. ஆனால் வலுசக்தி அமைச்சு 286 டொலர் விலைக்கு டீசல் கொள்வனவு செய்துள்ளது. சந்தை விலைக்கு மாறாக அதிக விலைக்கு 586 கோடி ரூபா செலுத்தி டீசல் கப்பல் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு டீசல் பீப்பாய்க்கு மேலதிகமாக 62 டொலர் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மிக மோசமான திருடர். முடிந்தால் அவர் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம் அப்போது பல விடயங்கள் வெளிவரும்.பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு நான் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை. முடிந்தால் வழக்குத் தாக்கல் செய்யுங்கள் என்று சவால் விடுக்கிறேன் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM